இந்தியாவில் உடல் பருமனால் அவதிப்படும் குழந்தைகள் 4.1 கோடி

1 Min Read

புதுடில்லி, ஜூலை 26- இந்தியாவில் 4.1 கோடி குழந்தைகள் அதிக எடையுடனோ அல்லது உடல் பருமனுடனோ அவதிப்படுகின்றனர் என்று உலக உடல் பருமன் அறிக்கை -2026 வெளியிட்ட தகவலில் கூறப் பட்டுள்ளது.

இந்த நிலையைத் தடுப்பதற்கான வழிகாட்டு அறிக்கையை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (அய்சிஎம்ஆர்) இந்த வாரம் வெளி யிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பாக்கெட் உணவுகளுக்குத் தெளிவான ஊட்டச்சத்து குறியீடு, விளம்பரத் தடை, பள்ளிகளில் சத்தான உணவு, அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை உள்ள உணவுகளுக்குக் கூடுதல் வரி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் மற்றும் அதன் 50 மீட்டர் சுற்றளவுக்குள் ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஅய்) தடையை, வழக்கமான சோதனைகள் மூலம் தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.அதிக கொழுப்பு, சர்க்கரை, உப்பு கொண்ட உணவுகளுக்குத் தெளிவான சட்ட வரையறை இல்லாததால் விதிகளை அமல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலை தொடர்ந்தால், 2030-க்குள் உலகின் மொத்தச் சிறுவர் உடல் பருமனில் 11 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு இந்தியாவில் இருக்கும். மேலும், நாட்டின் நோய் பாதிப்பில் 56.4 சதவீதம் ஆரோக்கியமற்ற உணவுகளாலேயே ஏற்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *