சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு ஆசாராம் பாபுவின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்!

1 Min Read

அகமதாபாத், மே 29 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதே நேரத்தில், கூட்டுப் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளில் இருந்து அவரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சாமியார் ஆசாராம் பாபு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த சாமியார் ஆசாராம் பாபுவுக்கு, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆசிரமங்களும் அறக்கட்டளைகளும் உள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு ஜோத்பூர் ஆசிரமத்தில் 16 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசாராம் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து அவர் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் பலமுறை பிணையில் வெளிவந்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் பிணையில் உள்ளார்.

கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

ஆயுள் தண்டனை உறுதி

சிறுமியைத் தனிப்பட்ட முறையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தர விட்டுள்ளது.

அதே வேளையில், சிறுமியை “கூட்டுப் பாலியல் வன்கொடுமை” செய்த குற்றச்சாட்டில் இருந்தும், அவர் மீது பதியப்பட்ட போக்சோ பிரிவு 5(ஜி)/6 மற்றும் சதித் திட்டம் தீட்டியதற்கான அய்பிசி பிரிவு 120(பி) ஆகிய வழக்குகளில் இருந்தும் ஆசாராம் பாபுவை நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த வழக்கில் ஆசாராமுடன் சக குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த அவரது ஆசிரமத்தைச் சேர்ந்த சஞ்சிதா குப்தா மற்றும் சரத் சந்திரா ஆகிய இருவரையும் அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *