கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை நிகழ்ச்சியில் மூன்று பெண்களிடம் நகை திருட்டு!

1 Min Read

திருத்தணி, ஆக. 10- திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை திருவிழாவில் 3 பெண்களிடம் 13.5 பவுன் நகை திருடப்பட்டது.

திருவாலங்காடு ஒன்றியம் தொழு தாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விமலா (வயது 67). இவர், ஆடிக்கிருத்திகையை ஒட்டி திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார். பின்னர் கோயில் பேருந்தில் ஏறி மலைக்கோயிலில் இறங்கிய போது இவர் அணிந்திருந்த 13.5 பவுன் தங்கச்சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

இதேபோல் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வளர்மதி (51) திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய மாட வீதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுவிட்டனர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம்வேல் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் (65) ஆடிக்கிருத்திகை யன்று சாமி தரிசனம் செய்ய தனது குடும்பத்துடன் சென்றார். கோயிலில் கூட்டநெரிசலைப் பயன்படுத்தி அவர் அணிந்திருந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து விமலா, வளர்மதி, வள்ளியம்மாள் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் திருத்தணி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கோயிலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு படக் கருவிகள் உதவியுடன் நகை திருட்டில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *