நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோரிடம் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் : ராகுல் காந்தி வலியுறுத்தல்!

சென்னை, ஆக.2 மாமல்லபுரத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு அழைத்து வரப்பட்ட, நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற் றோர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நேற்று (1.8.2026) வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில் தெரிவித்திருப்பதாவது:  ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளையை இழந்து துயருறுவதைப் பார்ப்பதை விட வேதனையானது வேறு எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட சீர்கேடுகள், மாணவர்களின் பல ஆண்டுகால கடின உழைப்பை ஒரே இரவில் பாழாக்கி விட்டது.

பிரதமருக்கு கண்டனம்

இதுபோன்ற சூழலில், பிரதமரோ மாணவர்களை “மன்னிப்பது” பற்றிப் பேசு வதற்கு துணிச்சலைக் கொண்டிருக்கிறார். அவரது இந்த பேச்சு முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.

பாதிக்கப்பட்ட துயருறும் ஒரு பெற்றோரைக்கூட பிரதமர் நேரில் சென்று சந்தித்ததில்லை. இந்திய மாணவர்களுக்கு பிரதமரின் ‘மன்னிப்பு வழங்கும் போக்கு’ தேவையில்லை; மாறாக, சீர்கேடுகளுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மாணவர்களிடம் மனப்பூர்வ மாக மன்னிப்புக் கேட்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *