புதுடில்லி, ஆக. 10- அமலாக்கத் துறையின் (ஈ.டி.) இயக்குநராகப் பணியாற்றி வரும் ராகுல் நவீனின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1993-ஆம் ஆண்டுப் பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய் பணி (அய்ஆர்எஸ்) அதி காரியான ராகுல் நவீன், வரி விதிப்பு மற்றும் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட அனுபவம் கொண் டவர். கடந்த 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி அமலாக்கத் துறை இயக்குநராக இவர் பொறுப்பேற்றார்.
இந்நிலையில், இவரது பதவிக் காலத்தை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு ஒன்றியய அமைச்சரவையின் நியம னங்கள் குழு (ஏசிசி) தற்போது ஒப்புதல் அளித் துள்ளது.
நிலுவையில் உள்ள விதிகளின்படி, அமலாக்கத் துறை இயக்குநராக ஒருவ ரைத் தொடக்கமாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்க முடியும். அதன் பிறகு, நிர்வாகத் தேவைகளின் அடிப்படையில் தலா ஓராண்டு வீதம் அதிகபட்ச மாக மூன்று முறை அவரது பதவிக் காலத்தை நீட்டிக்க சட்டத்தில் இடமுள்ளது.
இருப்பினும், அதிமுக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற உயர்பதவிகளில் ஒரே அதிகாரிக்கே தொடர்ந்து பணிநீட்டிப்பு வழங்கப்படுவது நிர் வாக வட்டாரத்தில் பல் வேறு விவாதங்களை எழுப்பி யுள்ளது.
“ஒரு குறிப்பிட்ட அதிகாரியின் பதவிக் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்படுவதால், அவருக்குக் கீழ் உள்ள 20-க்கும் மேற்பட்ட மூத்த அதிகாரிகள் பதவி உயர்வு பெற முடி யாமல் காத்திருக்கும் சூழல் உருவாகிறது. இதனால் தகுதியுள்ள பல அதிகாரிகள் தங்களற் கான உரிய பதவி உயர் வைப் பெறாமலேயே பணி ஓய்வுபெறும் நிலை ஏற்படுகிறது” என்று ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டு கின்றனர்.
அரசு தனது கட்டளை களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும் நபர்களை இத்தகைய முக்கியப் பொறுப்புகளில் தொடர வைப்பதற்காகவே, பிற மூத்த அதிகாரிகளின் பதவி உயர்வைப் புறந் தள்ளி பணிநீட்டிப்பு வழங் குவதாக விமர்சனங்களும் எழுந்துள்ளன.
