சென்னை, ஆக. 9- “தொகுதி மறுவரையறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது” என தவெக குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா விமர்சித்தார்.
இது தொடர்பாக, பெரம்பலூரில் திமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறியபோது, “தமிழ்நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத எந்தக் கட்சியாக இருந்தாலும் கூட்டம் போடலாம். ஆனால், தொகுதி மறுவரையறை என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் கூட்டம் போடுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. இது மக்களைத் திசை திருப்பும் செயல்” என தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சிப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, தொகுதி மறுவரையறை பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.
தொகுதி மறுவரை
