சென்னை, ஜூலை 25 நீட் தேர்வை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாளை தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று திராவிட மாணவர் கழகம் உள்ளிட்ட மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) அறிவித்துள்ளன.
அதன் விவரம் வருமாறு:
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன. தமிழ்நாடு இந்தத் திசை யில் முன்னோடி மாநிலமாகும். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து போராடி வந்துள்ளது. அதற்கும் முன்பிருந்தே கடுமை யாக எதிர்த்தும், நீதிமன்றத்தில் போராடியும் வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் நடந்த முறைகேடுகளையொட்டி, இந்தியத் தலைநகர் டில்லியிலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் நடந்துவரும் போராட்டங்கள் “முற்றிலும் நீட் ரத்து” என்ற நோக்கத்தோடு செல்ல வேண்டும் என்று “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN)” கருதுகிறது.
பல மாணவர் இயக்கங்களின் கூட்ட மைப்பாகத் தமிழ்நாட்டில் தொடர்ந்து செயல்பட்டு வரும் “மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு” (FSO-TN) இல் உள்ள அமைப்புகள் தனித்தனியாகவும், இணைந்தும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொடர் முழக்கப் போராட்டம்!
அதன் ஒரு பகுதியாக வரும் நாளை (26.7.2026) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் “இந்தியா முழுவதும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தொடர் முழக்கப் போராட்டம்” நடத்தத் திட்ட மிடப்பட்டுள்ளது.
பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் இந்தியா முழுவதும் நடைபெறும் போராட்டங்களுக்கும் எமது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம். நீட் ஒழிப்புக்காகப் போராடும் மாணவர்கள் மீது அரசுகள் நடத்தும் தாக்குதல்கள், கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம். எத்தனை அடக்குமுறை வந்தாலும், நீட் ஒழிக்கப்படும்வரை எங்கள் போராட்டம் ஓயாது என்பதைத் தெரிவித்துக் கொள்கி றோம்.
– இவ்வாறு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
