2025-இல் நாட்டின் குருதி சேகரிப்பு 1.58 கோடி யூனிட்களாக உயர்வு

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.9- நாடு முழுவதும் குருதி சேகரிப்பு அதிகரித்து வருகிறது. ஆனாலும் குருதி மேலாண்மையில் பல்வேறு சவால்கள் உள்ளன. இது தொடர்பான மாநில வாரியான தரவுகள் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பன்னாட்டு அளவில் இந்தியா வும், சீனாவும் அதிகளவில் குருதி சேகரிப்பு திட்டங்களை செயல் படுத்தி வருகின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் இந்தியா 1.58 கோடி யூனிட் குருதியும், சீனா 2.5 கோடி யூனிட் குருதியையும் சேகரித்துள்ளன. எனினும், இந்தியாவில் கடந்த 2025-இல் 17.4 லட்சத்துக்கும் அதிகமான குருதிக்கூறுகள் வீணடிக்கப்பட் டுள்ளன.

கடந்த 2023-ஆம் ஆண்டில் இது 1.42 கோடி யூனிட்களாக இருந்தது. 2025-இல் உத்தரப் பிரதேசம் அதிக பட்சமாக 21.6 லட்சம் யூனிட் குரு தியைச் சேகரித்துள்ளது. மகாராட்டிரா (18.73 லட்சம்), குஜராத் (11.82 லட்சம்), ராஜஸ்தான் (10.79 லட்சம்), தமிழ்நாடு (9.74 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

அதேசமயம், குருதிக் கூறுகள் வீணாவதிலும் உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அங்கு 2.40 லட்சம் குருதிக் கூறுகள் வீணாகி யுள்ளன. மகாராட்டிராவில் 1.87 லட்சம், கேரளாவில் 1.44 லட்சம், ராஜஸ் தானில் 1.21 லட்சம், தமிழ்நாட் டில் 1.09 லட்சம் குருதிக் கூறுகள் வீணாகியுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சைபா் நிதி மோசடிக்கு உதவி: மேலும் 105 போ் கைது

சென்னை, ஆக.9- தமிழ்நாட்டில் சைபா் நிதி மோசடிக்கு உதவிய தாக மேலும் 105 போ் கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாட்டில் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி, இணைய வழி வா்த்தக மோசடி, முதலீட்டு திட்ட மோசடி உள்ளிட்ட 20-க்கும் வகையான சைபா் நிதி மோசடிகள் நடைபெறுகின்றன. இந்த மோசடிகளில் நாள்தோறும் ரூ.16 கோடி வரை பொதுமக்கள் இழப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் உள்ள தங்களது முகவா்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றி அவா்களது வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துகின்றனா், சிலா் வங்கிக் கணக்குகளைப் பணம் கொடுத்து வாடகைக்கு பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு மோசடி மூலம் பெறப்படும் பணத்தில் 10 சதவீதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது. இவ்வாறு பயன்படுத்தப்பட்ட 310 வங்கி கணக்குகளை கண்டறிந்து, அது குறித்தும் சைபா் குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்தனா்.

மேலும் 105 போ் கைது: விசாரணையின் முடிவில் சைபா் நிதி மோசடிக்கு உதவியதாக மாநிலம் முழுவதும் பலா் கைது செய்யப் பட்டனா். இதில் 7.8.2026 அன்று 100 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், மேலும் 105 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக சென்னை காவல் துறை நேற்று (8.8.2026) தெரிவித்தது.

இவா்களில் பெரும்பாலானவா்கள் சென்னை, அரியலூா், கோயம்புத்தூா், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூா், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூா், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், தஞ்சாவூா், தேனி, திருப்பத் தூா், திருவள்ளூா், திருவாரூா், திருநெல் வேலி, திருச்சி, விருதுநகா் ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவா்கள் ஆவார்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *