நான்கு நிதியாண்டுகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை அபராதமாக மட்டும் ரூ.26,100 கோடி வசூலித்த வங்கிகள்

புதுடில்லி, ஜூலை 29- கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் அபராதமாக பெற்ற தொகை குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதில் அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவையை மேம்படுத்தும் வகையில் நாட்டில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில் 10 வங்கிகள் குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதம் வசூலிப்பதை நிறுத்தி உள்ளது. மீதமுள்ள இரண்டு வங்கிகள் அந்த தொகையை சீரமைத்துள்ளது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்க வேண்டிய அவசியமில்லாத அடிப்படை சேமிப்பு வங்கிக் கணக்கு சேவையை பெறும் 73 வாடிக்கையாளர்களுக்கு அபராதம் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

கடந்த நான்கு நிதியாண்டுகளில் சுமார் 26,100 கோடி ரூபாயை குறைந்தபட்ச இருப்பு தொகை வைக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் அபராதமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *