தோல்வியடைந்த அமித்ஷா பதவி விலக வேண்டும் சிஜேபி நிறுவனர் அபிஜீத்

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 31 ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கோரிக்கையை ஆதரிப்பதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே கூறியுள்ளார்.

மகாராட்டிரத்தின் சத்ரபதி சம்பாஜிநகரில் செய்தியாளர்களுடன் அபிஜீத் தீப்கே பேசியதாவது, “இன்றைக்கு நீதித் துறை மீதுகூட கேள்விகள் எழுப்ப முடிகிறது. ஆனால், ஆளும் அரசை நோக்கி கேள்விகள் எழுப்ப முடிவதில்லை. சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் போன்ற மாநில கட்சிகளை உடைப்பதற்காக அமலாக்கத் துறை, சிபிஅய் ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பது எதிர்க்கட்சிகளின் பிரச்சினை மட்டுமல்ல. நாட்டின் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

டில்லியில் ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தியதன் விளைவாகவே தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். தற்போது புதிய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேசுபவரை கல்வி அமைச்சராகக் கொண்டு வந்ததன் மூலம் நாட்டுக்கு என்ன செய்தி சொல்ல வருகின்றனர்? பாஜகவில் ரவுடிகள்தான் அதிகம் நிரம்பியுள்ளனர். இந்த அரசில் ரவுடிகளுக்கும் குற்றவாளிகளுக்கும்தான் ஆதரவாகச் செயல்படுகிறது.

டில்லியில் ஜூலை 20 ஆம் தேதி மாணவர்கள் மீது காவல்துறை தடியடி நடத்த உத்தரவிட்டது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான், வேறு யாரும் இல்லை. அவர் பதவி விலக வேண்டும் என்ற ராகுல் காந்தியின் கோரிக்கையை முழுமையாக ஆதரிக்கிறேன்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு வெளிநாடுகளிலிருந்து நிதி வருவதாக வதந்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறு உண்மையாக இருந்தால், அது அமித் ஷாவின் தோல்வியைத்தான் காட்டுகிறது. வெளிநாட்டிலிருந்து இயங்கும் ஓர் இயக்கத்தைக்கூட கண்டுபிடிக்க முடியவில்லையா?

எங்கள் போராட்டத்துக்கு விவசாய சங்கத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். விவசாயிகள் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். அதனால் எங்களுடன் போராட்டக் களத்தில் நின்றனர். நாங்களும் அவர்களுக்கு ஆதரவாக நிற்போம். நானும் விவசயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான்” என்று தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *