நான்கு மாதங்களில் 22 பேருக்குத் தூக்குத்தண்டனை அறிவித்த உத்தரப்பிரதேச நீதிபதி

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

முசாபர்நகர், ஆக.21 இந்திய நீதித் துறை வரலாற்றில் சாதாரணமாக அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே வழங்கப்படும் மிக உயர்ந்த தண்டனையான மரண தண்டனையை, கடந்த வெறும் நான்கு மாத காலத்திற்குள் மட்டும் 22 பேருக்கு விதித்து உத்த ரப்பிரதேச நீதிமன்ற நீதிபதி அதிரடி தீர்ப்புகளை வழங்கியுள்ளது பேசு பொருளாகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதி மன்றத்தின் நீதிபதியான ரவி குமார் திவாகர் தான் இந்த அசாத்திய தீர்ப்புகளை அடுத்தடுத்து பிறப்பித்து தற்பொழுது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளார். இதற்கு முன்பாக வாரணாசியில் ஞான வாபி மசூதி காணொலிக் காட்சி ஆய்வுக்கு உத்தரவிட்டதன் மூலம் நாடு முழுவதும் அறியப்பட்ட இவர், தற்பொழுது குற்ற வாளிகளுக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு இந்த நட வடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான குறுகிய காலத்திற்குள், மொத்தம் 10 கொடூரமான குற்ற வழக்குகளை விசாரித்து இந்த 22 பேருக்கும் அவர் மரண தண்டனை விதித்துள்ளார். நீதிபதி ரவி குமார் திவாகர் விசாரித்த இந்த வழக்குகளில் பெரும்பாலானவை 1999 முதல் 2019 வரையிலான காலகட்டங்களில் நடந்து, பல ஆண்டுகளாக இழுத்தடித்து வந்த மிகக் கொடூரமான கொலை, கொள்ளை மற்றும் கடத்தல் சம்பவங்களாகும்.

அரசுத் தரப்பு வழக்குரைஞர் குல்தீப் குமார் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, இந்தத் தொடர் அதிரடித் தீர்ப்புகள் ஏப்ரல் 6 ஆம் தேதி வழக்குரைஞர் சமீர் சஃபி கொலை வழக்கில் மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் இருந்து தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28இல் நான்கு பேருக்கும், மே மற்றும் ஜூன் மாதங்களில் மூன்று பேருக்கும், ஜூலை மாதத்தில் மட்டும் வெவ்வேறு வழக்கு களில் ஏழு பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

இறுதியாக ஆகஸ்ட் 12ஆம் தேதி, சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு 1999இல் பணத்திற்காக மரம் வியாபாரி சலீம் என்ப வரைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் ஷாநவாஸ் என்ற குற்றவாளிக்கு மரண தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தார். அடுத்த நாளே, அதாவது ஆகஸ்ட் 13 அன்று, 12 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பகையின் காரணமாக பவன் குமார் என்பவரது வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் ராம்வீர், ராஜீவ், ராகுல், ஹரேந்தர் குமார் ஆகிய நான்கு பேருக்கும் ஒரே நாளில் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி திவாகர் அதிரடி காட்டினார்.

நெடுஞ்சாலை பணியில் இருந்த ஹோம் கார்டு காவலர் படுகொலை போன்ற கொடூரமான குற்றங்களை அரிதினும் அரி தான வழக்குகள் என வகைப்படுத்தி இந்தத் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *