வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் போராட்டம் பா.ஜ.க. அரசுக்கு சிஜேபி எச்சரிக்கை

2 Min Read

புதுடில்லி, ஜூலை 28- மாணவப் போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறாவிட்டால், மீண்டும் ஒரு போராட்டத்தை தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. பின்னர், நீட் தேர்வால் தற் கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் சிஜேபி வலியுறுத்தியது.

இதன் தொடர்ச்சியாக, கடந்த 25-ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை விட்டு விலகினார். இதையடுத்து, மற்ற இரண்டு கோரிக்கைகளையும் ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்ததை அடுத்து, அன்றைய நாளே போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில், டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்துக்கு ஆதர வாக நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டங்களில் பலர் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அவை திரும்பப் பெறப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதை சிஜேபி கண்டித்துள்ளது.

இது தொடர்பாக சிஜேபியின் செய்தித் தொடர்பாளர் ஆசுதோஷ் ரங்கா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “போராட்டக்காரர்கள் மீது எந்தவிதமான காவல் துறை நடவடிக்கையும் எடுக்கப் படாது என்ற ஒப்பந்தம் முழுமையாக மீறப்படுவதை நாங்கள் பார்க்கிறோம். பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டில்லி மற்றும் பிற மாநிலங்களில் நூற்றுக்கணக்கா னோர் கண்காணிக்கப்படுவதோடு, துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப் படுகிறார்கள். போராட்டக் காரர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் தன்னார் வளர்கள் டில்லியில் தடுத்து வைக் கப்படுவது குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன.

போராட்டக்காரர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மாணவர்களை விடுவிக்க வேண்டும். ஒப்பந்தப்படி, டில்லி காவல் துறை, மத்திய புலனாய்வு அமைப்புகள், பாஜக மற்றும் அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களின் காவல் துறை ஆகியவை, போராட்டக்காரர்கள் மீது இனி எந்த வழக்கும் பதியக் கூடாது என்று நாங்கள் கோருகிறோம். இல்லாவிட்டால், நாங்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *