புதுடில்லி, ஜூலை 28- மாணவர்கள் மீதான தடியடியைக் கண்டித்து நாடா ளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று (27.7.2026) அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
அடுத்தடுத்து ஒத்திவைப்பு: நாடாளு மன்றமழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 13-ஆம் தேதி வரை திட்ட மிடப்பட்டு உள்ள இந்தக் கூட்டத்தொடர், நேற்று (27.7.2026) வரை ஒழுங்காக நடைபெறவில்லை. எதிர்க்கட்சியினரின் இடைவிடாத முழக்கத்தால் தொடர்ந்து ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த வாரம் முழுவதும் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகலியுறுத்திய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலகிய பிறகு நேற்று (27.7.2026) மாணவர்கள் மீதான தடியடி நிகழ்விற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தி அமளி யில் ஈடுபட்டனர். பீகாரில் மாணவர்கள் மீதான தாக்குதலையும் அவர்கள் கண்டித் தனர். இதனால் இரு அவைகளும் அடுத்தடுத்து ஒத்தி வைக்கப்பட்டன.
ஆர்ப்பாட்டம்: இந்த ஒத்திவைப்புக்கு இடையே எதிர்க்கட்சி நாடாளு மன்ற உறுப்பினர்கள் அதே கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் மகர நுழைவு வாயில் எதிரே ஆர்ப் பாட்டம் செய்தனர். இதில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து, பிரியங்கா காந்தி கூறுகையில் “ஏ.கே-47, பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்துவதற்கு மாணவர்கள் என்ன பயங்கரவாதிகளா? பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள மாணவர்கள் மீது மீண்டும் எப்.அய்.ஆர். பதிவு செய்துள்ளனர். அவர்கள் தங்கள் பழக்கங்களை விடவில்லை. பல மாணவிகளின் பெற்றோர்கள் மிரட்டப் படுவதாகவும், தங்கள் மகள்களைப் போராட்டத்தில் பங்கேற்க அனுமதித்தது எப்படி? என்று விசாரிக்கப்படுவதாகவும் நான் கேள்விப்பட்டேன். இதற்கு என்ன அர்த்தம்? இந்தியாவில் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்க முடியாதா?” என கேட்டார்.
தி.மு.க. ஆர்ப்பாட்டம்: நாடாளு மன்றமழைக்கால கூட்டத் தொடரில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘இந்தியா’ கூட்டணிப் பக்கம் சேராமல் மக்கள் பிரச்சினைக்காக தனியாக போராடி வருகிறார்கள். கடந்த வாரம் அவர்கள் மேகதாது பிரச்சினை குறித்து போராட் டம் நடத்தினர். இந்த நிலையில் நேற்று (27.7.2026) நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியு றுத்தினார்.
இதனை வலியுறுத்தி நாடாளுமன் றத்தின் மகர நுழைவு வாயில் படிக்கட்டில் நின்று முழக்கங்களை எழுப்பினர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், முரசொலி, கனிமொழி ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் “வேண்டாம் வேண்டாம் நீட் தேர்வு வேண்டாம்” என்பது போன்ற முழக்கங்களை எழுப்பினர்.
