எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ கொள்கையை அமல்படுத்த முடியாது

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஆக.7- எஸ்.சி, எஸ்டி சமூக பிரிவுகளில் பொரு ளாதாரத்தில் முன்னேறி யவர்களை ‘கிரீமிலேயர்’ என வகைப்படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கான பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தர விடக்கோரி உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டியலின, பழங்குடியின வகுப்பில் (எஸ்சி, எஸ்டி) உள்ள பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப் படையில் பலன்களைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால், அதே சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இட ஒதுக்கீட்டின் பலனை பெறாமல் உள்ளனர். இது இடஒதுக்கீட்டின் நோக் கத்தையே சிதைக்கிறது.

எனவே, பொரு ளாதாரத்தில் முன் னேறியவர்களை இட ஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசா ரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு பதில ளிக்க நோட்டீஸ் பிறப் பித்தது இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய் துள்ள ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வருமானம் அடிப்படையில் முன்னு ரிமை அளிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.

‘கிரீமிலேயர்’ விலக்கு என்பது பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங் குடியினருக்குப் பொருந் தாது என்றும், அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 341 மற்றும் 342-இன் கீழ் பட்டி யல் ஜாதியினர், பழங் குடியினரை வகைப்படுத்த நாடாளுமன்றத்தால் மட் டுமே முடியும் எனவும் நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண் டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *