மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் 7 முறை சுட்ட அதிரடிப் படை வீரர் விசாரணையில் அதிர்ச்சித் தகவல்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

புதுடில்லி, ஜூலை 27– நாடாளுமன்றத்தை நோக்கி கடந்த ஜூலை 20 அன்று நடைபெற்ற போராட்ட பேரணியின் போது, ஒன்றிய தீவிர அதிரடிப் படையைச் சேர்ந்த வீரர் பெல்லட் துப்பாக்கியால் குறைந்த பட்சம் 7 முறை சுட்டுள்ளார் என்றும், அதில் 5 குண்டுகள் நேரடியாகப் போராட்டக்காரர்கள் மீது பாய்ந்துள்ளன என்றும் சி.ஆர்.பி.எப். நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

சுடப்பட்ட 7 சுற்று களில் 5 குண்டுகள் போராட்டக்காரர்களைத் தாக்கியதாகவும், 2 குண்டுகள் தரையில் பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போராட்டக்காரர்கள் மீதான நடவடிக்கையின் போது பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத் தப்பட்டதா என்பது குறித்து சி.ஆர்.பி.எப். முன்னதாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டின் காரணமாகப் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 25 வயதான இர்ஷாத் ஷேக் என்ற நபரும் அடங்குவார்.

இதில் ஒருவர் ஆங்கில இதழுக்காக செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளரும் அடங்குவார்.

அமைதியாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தில் துப்பாக்கி பிரயோகம் “இனிமேல் யாரும் போராடவந்தால் உயிரோடு திரும்ப மாட்டீர்கள்” என்ற மிரட்டலே ஆகும். ஜாலியன்வாலாபாக் துப்பாக்கிச்சூட்டிலும் இதே பாணியில் தான் ஜெனரல் டயர் செயல்பட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *