அரசியல் பகையைத் தாண்டி மனிதாபிமானம் தீக்காயமடைந்த பா.ஜ.க. பெண் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அகிலேஷ்

1 Min Read

லக்னோ, ஏப்.30 – உத்தரப் பிரதேசத் தில் தனது உருவபொம்மையை எரிக்கும் போராட்டத்தின் போது தீக்காயமடைந்த பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினரை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  நேரில் சந்தித்து நலம் விசாரித்தது அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது மற்றும் அதன் அடிப்படையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்திருத்த மசோதா தோல்வி யடைந்தது. இதனைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்க்கட்சிகளைக் கண்டித்து போராட்டங்களில் ஈடு பட்டனர். கடந்த வாரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது:

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் ஆகியோரின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன.

அப்போது, பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் அனுபாமா ஜெய்ஸ்வால் உருவபொம்மையை எரிக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக அவர் உடலிலும் தீப் பற்றியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக விலகியதால், தீ அவரது முகத்திலும் பரவியது. பின்னர் காவல்துறையினர் போர்வையைப் போர்த்தி தீயை அணைத்தனர்.

மருத்துவமனையில்
அகிலேஷ் சந்திப்பு

முகத்தில் பலத்த தீக் காயங்களுடன் லக்னோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் அனுபாமா ஜெய்ஸ்வாலை, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்  நேற்று முன்தினம் (28.4.2026) நேரில் சந்தித்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அவர், சட்டமன்ற உறுப்பினருக்கு ஆறுதல் கூறினார்.

“வெறுப்புத் தீ வேண்டாம்’: எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு

இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அகிலேஷ் தனது ‘எக்ஸ்’ (X) பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சமூகத்தில் மக்களிடையே வெறுப்புத் தீ பரவுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சமூகத்தில் நல்லிணக்கம் எனும் மழை பொழிய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். காயமடைந்த அவர் விரைவில் முழு உடல்நலம் பெற வாழ்த்துகிறேன்

தன்னுடைய உருவபொம்மையை எரித்த போராட்டத்திலேயே விபத்து நடந்திருந்தாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சியின்றி பாதிக்கப் பட்டவரை அகிலேஷ் சந்தித்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *