ஆரம்பித்து விட்டார்கள் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் 2029-இல் செயல்பாட்டுக்கு வருமாம்! ஆர்.எஸ்.எஸ். குரலை எதிரொலிக்கிறார் நாடாளுமன்ற கூட்டுக்குழு தலைவர் பி.பி. சவுத்ரி

பனாஜி, ஜூலை 11 ஒரே நாடு, ஒரே தேர்தல் நடை முறைப்படுத்துவதற்கான அரசி யலமைப்பு திருத்த மசோ தாக்களை ஆய்வு செய்ய பாஜ நாடாளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் அமைச்சருமான பி.பி.சவுத்ரி தலைமையில் நாடாளுமன்றக் கூட்டு குழுவை(ஜேபிசி) அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இரண்டு நாள் கூட்டம் கோவாவில் நடந்தது. அதன் பின் பி.பி.சவுத்ரி, நேற்று (10.7.2026) பேட்டியளித்தார். அவர் கூறியதாவது: அடிக்கடி நடைபெறும் தேர்தல்களால் இந்தியப் பொருளாதாரத்திற்கு கிட்டத்தட்ட ரூ. 7 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

கோவா முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நாங்கள் கலந்துரையாடல் நடத்தினோம். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை எவ்வாறு செயல்படுத்துவது, என்னென்ன சவால்கள் உள்ளன. அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சிறந்த சமநிலையை ஏற்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. குஜராத், கருநாடகா, மகா ராட்டிரா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், அரி யானா மற்றும் டில்லிக்கு ஏற்க னவே பயணம் செய்துள்ளோம்.

அங்கு அரசியலமைப்பு நிபுணர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந் தாலோசிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.குறிப்பாக சிவில் சமூகம் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந் தவர்களில் 99 சதவீதம் பேர் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவதை ஆதரிப்பதை கண்டறிந் துள்ளோம். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஏற்பு டைய ஒரு வழிமுறையை உரு வாக்கும் நடவடிக்கையில் ஈடுபட் டுள்ளோம்.

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக சீர்திருத்தம் அம லுக்கு வர வழிவகுக்கும் வகை யில் பல்வேறு மாதிரிகள் ஆராயப் பட்டு வருகிறது. ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு பொருளாதார மதிப்பீட்டின்படி, நாடு முழுவதும் தனித்தனியாக தேர்தல்களை நடத்துவதால் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது.

அதே சமயம் ஒருங்கிணைந்த தேர்தல்கள் அதற்கு இணையான பொருளாதார ஆதாயங்களை அளிக்கக்கூடும் என்பது தெரிய வந்துள்ளது. தேர்தல்கள் ஒரு மாநிலத்திற்குள் மட்டும் கட்டுப் படுத்தப்படவில்லை. பொருளா தாரம் ஒன்றோடொன்று இணைந் துள்ளதால், எங்கு தேர்தல் நடந்தாலும் அது மற்ற மாநிலங் களில் தாக்கத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பி.பி.சவுத்ரி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *