அயோத்தி, ஜூலை 11 – அயோத்தி ராமன் கோயிலில் திருடிய நன்கொடைப் பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்தது தெரியவந்துள்ளது. 30 வங்கி கணக்குகளை காவல்துறையினர் முடக்கினர்.
வீட்டில் சோதனை
அயோத்தி ராமன் கோவிலில் பக்தர்கள் நன்கொடையாக அளித்த பணம் கோடிக்கணக்கில் திருடு போயுள்ளது. இது குறித்து உத்தரப்பிரதேச அரசு சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, திருடிய பணத்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன செய்தனர் என்பது குறித்து விசாரணை அதிகாரிகள் விசாரிக்கத் தொடங்கி உள்ளனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கைதானவர்கள் வீடுகளில் அயோத்தி காவல் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர். கைதான அனுகல் மிஸ்ராவை அவரது இல்லத்துக்கு கூட்டிச்சென்று சோதனை நடத் தினர். அவரது குடும்ப உறுப்பினர் களிடம் விசாரணை நடத்தினர்.
பங்குச்சந்தை முதலீடு
விசாரணையில், திருடிய பணத்தை, தானும், மற்றொரு குற்றவாளியான அவினாஷ் சுக்லாவும் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாக அனுகல் மிஸ்ரா ஒப்புக்கொண்டார். பணம் வந்த விதத்தை மறைப் பதற்கு மட்டுமின்றி, லாபம் சம்பாதிப்பதற்காகவும் இப்படி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் திருட்டு பணத்தை வட்டிக்கு விட்டுள்ளனர். தங்கள் உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றி உள்ளனர். பின்னர், மீண்டும் தங்களது சொந்த கணக்குகளுக்கு திருப்பி விட்டுள்ளனர். வீட்டில் இருந்த ஆவணங்களை காவல் துறையினர்ஆய்வு செய்தனர். மின்னணு சாதனங்கள், முதலீட்டு ஆவணங்கள் ஆகியவற்றையும் தேடினர்.
வங்கி கணக்குகள் முடக்கம்
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் 30 வங்கி கணக்குகளை விசாரணை அதிகாரிகள் முடக்கினர். அவர்களின் அறிவிக் கப்பட்ட வருமானத்துக்கு பொருந்தாதவகையில் பணம் பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்ததால் அந்த நடவடிக்கையை எடுத்தனர். பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு, திருட்டு பணத்தை பதுக்கவும், பணம் கொடுக்கல், வாங்கலுக்கு, தனிப்பட்ட பயன்பாட்டுக்கு பணம் எடுக்கவும் அந்த வங்கி கணக்குகளை அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். வங்கி பரிமாற்றத்தை பங்குச்சந்தை முதலீடுகள், சொத்து வாங் கியது, மீட்கப்பட்ட பணம் ஆகிய வற்றையும் அதிகாரிகள் ஒப்பிட்டுப்பார்த்துவருகிறார்கள்.
சொத்து குவிப்பு
குற்றவாளிகள், கோவிலில் நன்கொடை எண்ணும் முறை யில் உள்ள ஓட்டைகளை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி உள்ளனர். திருட்டு தெரியாமல் இருப்பதற்காக, சிறு, சிறு தொகையாக திருடி வந்துள்ளனர். முதலீடுகள் மூலம் கிடைத்த லாபத்தை அவர்கள் எடுத்துள்ளனரா? மறுமுதலீடு செய்துள்ளனரா? வேறு சொத்துகள் வாங்க பயன்படுத்தினார்களா? என்றெல் லாம் விசாரணை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். குற்றம் சாட்டப்பட்ட பலர் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை வாங்கி குவித்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
