ரூ.54 ஆயிரம் கோடி டிஜிட்டல் மோசடி “இது ஒரு வழிப்பறி கொள்ளை” உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி; ஒன்றிய அரசுக்கு முக்கிய உத்தரவு

1 Min Read

புதுடில்லி, பிப்.10  நாடெங்கும் அதிகரித்து வரும் ‘டிஜிட்டல் கைது’ உள்ளிட்ட இணையதள மோசடிகள் குறித்து உச்ச நீதிமன்றம் நேற்று (9.2.2026) மிக முக்கியமான கருத்துக்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.

ரூ.54 ஆயிரம் கோடி கொள்ளை

நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய் மால்யா மற்றும் என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, டிஜிட்டல் குற்றங்கள் மூலம் சுமார் ரூ.54,000 கோடி பறிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், “இது வெறும் குற்றமல்ல, ஒரு வழிப்பறி கொள்ளை” என்று வர்ணித்தனர். இந்தத் தொகையானது இந்தியாவின் சில சிறிய மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மோசடி களில் வங்கி அதிகாரிகளின் கூட்டுச் சதி அல்லது அலட்சியம் இருப் பதற்கான வாய்ப்புகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி ஆர்பிஅய் மற்றும் பிற வங்கிகள் உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியது.

சி.பி.அய் விசாரணை: ‘டிஜிட்டல் கைது’ தொடர்பான வழக்குகளை சி.பி.அய் விரைந்து விசாரிக்க வேண்டும். டில்லி மற்றும் குஜராத் அரசுகள் இதற்குத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

வரைவு அறிக்கை: ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச் சகம், ரிசர்வ் வங்கி மற்றும் தொலைத்தொடர்புத் துறையின் வழிகாட்டுதல்களின்படி, இக்குற்றங் களைத் தடுப்பது குறித்து 4 வாரங்களுக்குள் ஒரு வரைவு அறிக் கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.

இழப்பீட்டுக் கட்டமைப்பு: பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான ஒரு முறை யான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி மற்றும் பிற நிறுவனங்கள் ஆலோசனை நடத்த வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *