புதுடில்லி, ஜூலை 7 உலகம் முழுவதும் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 2 சதவீதம் பேரைப் பாதிக்கும் வகையில், புதிய கட்ட பணிநீக்க நடவடிக்கையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த அதிரடி முடிவு ஒரு பரந்த மறுசீரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கேமிங் பிரிவு (Gaming Division) மிகப்பெரிய தாக்கத்தைச் சந்திக்கவுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் சுமார் 7 சதவீதம் பேருக்கு (சுமார் 9,000 ஊழியர்கள்) விருப்ப ஓய்வு அல்லது பணி விலகல் திட்டங்களை மைக்ரோசாப்ட் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. முந்தைய நடவடிக்கைகளைத் தொடர்ந்து, தற்போதைய மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் உலகம் முழுவதும் மேலும் 4,800 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
