தாஜ்மஹாலுக்கும் ஆபத்தா? மதவாதக் கண்ணோட்டத்திற்கு அளவே இல்லையா?

2 Min Read

புதுடில்லி ஜூலை 7–  ஆக்ராவில் தாஜ்மகால் வளாகத்தில் அகழாய்வு நடத்தக் கோரி தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசு மற்றும் ஏஎஸ்அய்-க்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அறிவிக்கை அனுப்பியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின்  ஆக்ராவில் உலகின் 7-ஆவது அதிசயமாக கருதப்படும் தாஜ்மகால் உள்ளது. இது முகலாய மன்னர் ஷாஜஹானால் 1563-இல் கட்டி முடிக்கப்பட்டது. இது அங்கிருந்த ஒரு கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக அவ்வப் போது சர்ச்சைகள் எழுகின்றன.

தற்போது உத்தரப்பிரதேசத்தின் பகவான் சிறீ அக்ரேஷ்வர் மஹாதேவ் நாகநாதேஷ்வர் விராஜ்மான் தேஜோ மகாலயா கோயில் நிர்வாகிகள் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத் தில் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதில், “தேஜோ மகாலயா என்ற பெயரில் இருந்த கோயிலை இடித்துவிட்டு தாஜ்மகால் கட்டப் பட்டுள்ளது. எனவே அங்கு அக ழாய்வு நடத்த அரசு ஆணையர் நியமிக்க வேண்டும்” என்று கோரப் பட்டுள்ளது.

இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, ஒன்றிய அரசு மற்றும் அதன் கீழ் செயல்படும் இந் தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்அய்) விளக்கம் அளிக்க வேண்டும் என அறிவிக்கை அனுப்பியுள்ளது.

இதற்கு முன் இந்த மனு, ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஆதாரமில்லை எனக் கூறி அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடைசியாக கடந்த மே 2022-இல் தாஜ்மகால் மீது ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இதில், தாஜின் அடித்தளத்தில் சுமார் 22 அறைகள் பூட்டிக் கிடப்பதாகவும், அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள் இருப்பதாகவும் சந்தேகம் கிளப்பப்பட்டது. ஆனால் தாஜின் அடித் தளத்தில் அறைகள் எதுவும் இல்லை என்று கூறி இந்த வழக்கும் தள்ளுபடியானது.

இதற்கு ஆக்ராவில் ஏஎஸ்அய் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய தொல்பொருள் ஆய்வாளரான டி.தயாளன் எனும் தமிழர் எழுதிய ‘Tajmahal and its Conservation’ என்ற நூல் ஆதாரமானது. ஆக்ரா மண்டலக் கண்காணிப்பாளராக 2003 முதல் 2007 வரை தாஜ்மகாலை நிர்வகித்த தயாளன் தனது ஆய்வில் தாஜ்மகாலின், அடித்தளத்தில் பெரிய அளவுகளிலான நிலவறை மட்டுமே அமைந்துள்ளதே தவிர அறைகள் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போதைய வழக்கு குறித்து மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “இந்த வழக்கில் கடந்த 2015-இல் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஆக்ரா சிவில் நீதிபதி முன்னிலையில் நிலுவையில் உள்ளது. வளாகத்திற்குள் ஒரு கோயில் இருப்பதை உறுதி செய்யுமாறு இவ்வழக்கு கோருகிறது. இவ்வழக்கு பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நிலையில், தாஜ்மகாலை ஆய்வு செய்ய வழக்குரைஞர் ஆணையர் நியமிக்கக்கோரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் பட்டது. அந்த வழக்கு இப்போது உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *