தேசிய நெடுஞ்சாலை கட்டுமான இலக்கில் ஒன்றிய அரசுக்குப் பின்னடைவு!

1 Min Read

புதுடில்லி, ஏப். 25- கடந்த நிதியாண்டில் தேசிய நெடுஞ் சாலைகளை அமைப்பதற்கென நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட முடியாமல் ஒன்றிய அரசு பின்னடைவைச் சந்தித்துள்ளது. நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிர்வாக அனுமதிகளைப் பெறுவதில் ஏற்பட்ட காலதாமதமே இதற்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி:

நிர்ணயிக்கப்பட்ட இலக்கு: 10,000 கி.மீ. கட்டப்பட்ட தூரம்: 9,380 கி.மீ. இது கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் கட்டப்பட்ட 9,829 கி.மீ. என்ற அளவை விடக் குறைவாகும். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கட்டுமானப் பணிகள் சுணக்கமடைந்துள்ளது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:

“நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் சட்ட ரீதியான சிக்கல்கள், சுற்றுச்சூழல் மற்றும் இதர துறைகளிடம் இருந்து அனுமதி பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் போன்றவற்றால் கட்டுமானப் பணிகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை.”

கடந்த சில நிதியாண்டுகளில் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளின் விவரம் பின்வருமாறு:

2023-2024 12,349,  2024-2025 10,660,  2022-2023 10,331, நடப்பு (மதிப்பீடு)   9,380 கடந்த 2023-2024 நிதியாண்டில் சாதனை அளவாக 12,349 கி.மீ. சாலைகள் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த வேகம் கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் காலங்களில் இந்தத் தடைகளைச் சரிசெய்து பணிகளை வேகப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *