சிறப்பு பூஜைக்காக நிர்வாண ஒளிப்படம் கேட்டு பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த ஜோதிடர் தலைமறைவு!

பெங்களூரு, மே 4 கருநாடக மாநிலம் பெங்களூரு தெற்கு (ராமநகர்) மாவட்டத்தில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கைப்பேசிக்கு ஒருவர் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் தன்னை ராமநகர் அருகே தொட்டமன்னுகுட்டே கிராமத்தைச் சேர்ந்த கிரண் என கூறி அந்த பெண்ணிடம் அறிமுகம் செய்து கொண்டார். அத்துடன் தான் ஒரு ஜோதிடர் என்றும் கிரண் தெரிவித்தார்.
பின்னர் தான் பெங்களூருவில் ஒரு சிறப்பு பூஜை செய்ய இருப்பதாகவும், அந்த பூஜைக்கு ஒரு பெண்ணின் நிர்வாண ஒளிப்படம் தேவைப்படுவதாகவும், அந்த பெண்ணின் உடலில் எங்கும் மச்சம் இருக்கக் கூடாது என்றும், மச்சம் இருந்தால் பூஜை வெற்றி அடையாது என்றும், அதனால் மச்சம் இல்லாத பெண்ணின் நிர்வாண ஒளிப்படத்தை வைத்து தான் பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இந்த பூஜைக்காக உங்களை தேர்வு செய்ய உள்ளேன் எனவும் கிரண் தெரிவித்தார்.
இதைக்கேட்டு அந்த பெண் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார். அதன்பிறகும், அந்த பெண்ணிடம் நிர்வாண ஒளிப்படத்தை அனுப்பும்படி கிரண் கைப்பேசியில் தகவல்களை அனுப்பி வைத்தபடி இருந்தார். இவ்வாறு நிர்வாண ஒளிப்படத்தை அனுப்பினால், ரூ.30 லட்சம் கொடுப்பதாகவும் அப் பெண்ணுக்கு கிரண் தகவல்களை அனுப்பினார். கடந்த ஒரு வாரமாக நிர்வாண ஒளிப்படத்தைக் கேட்டு கிரண் தொல்லை கொடுத்ததால், அந்தப் பெண் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மேலும் நடந்த சம்பவங்கள் பற்றி ராமநகர் மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் புகார் அளித்தார். காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகிவிட்ட கிரணை காவல் துறையினர் தேடிவருகிறார்கள். நிர்வாண ஒளிப்படத்துக்கு ரூ.30 லட்சம் தருவதாக ஆசைகாட்டி பெண்ணுக்குத் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *