புதுடில்லி, ஜூலை 6- உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமன் கோயில் காணிக்கை திருட்டு வழக்கை சிறப்பு விசாரணை குழு (எஸ்ஜடி) விசாரித்து வருகிறது.
இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வருவதற்கு முன்பு வரை, சிறீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக் கட்டளையின் வங்கி கணக்குகளில் நாள்தோறும் சராசரியாக ரூ.16 லட்சம் முதல் ரூ.18 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டு வந்தது.
ஆனால், திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்த பிறகு, இந்தத் தொகை நாள்தோறும் ரூ.24 லட்சம் முதல் ரூ.26 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில், இதற்கு முன்பு நாள்தோறும் ரூ.6 லட்சம் முதல் 8 லட்சம் வரை திருடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களின் துல்லியமான அளவும், மதிப்பும் வழக்கமான நடைமுறைகளின் பகுதியாக இல்லை. இந்தக் குறை பாட்டை குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தியுள்ளனர். கோயிலிலிருந்து திருடப்பட்ட நகைகளை உருக்கி, தங்கக் கட்டிகளாக மாற்றியிருக்கலாம் என்றும் எஸ்அய்டி சந்தேகிக்கிறது. ஏனெனில், கைதானவர்களிடமிருந்து திருடப்பட்ட நகைகளை இதுவரை மீட்க முடியவில்லை.
நகைகளாகப் பெற்ற காணிக் கைகள் மற்றும் அவற்றைப் பரா மரிக்கும் தற்போதைய நடை முறைகள் குறித்து எஸ்அய்டி விரிவாக விசாரணை நடத்தியது. நகைகள் தொடர்பான ஆவணங் களையும், இந்திய அரசின் நிறுவனமான ‘பிரிண்டிங் அண்ட் மின்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா’ உடனான பரிவர்த்தனை தொடர் பான கோப்புகளும் ஆய்வுக்காக வரவழைக்கப்பட்டுள்ளன. இந்த நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட உலோகங்களின் முழுமை யான விவரங்களையும் எஸ்அய்டி அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதனிடையே, அறக்கட்டளை சமர்ப்பித்த ஆண்டுக்கான வரவு செலவுகள் மீதான தணிக்கை கணக்குகளிலும் தவறுகள் இருப்பதை எஸ்்ய்டி கண்டுபிடித்துள்ளது. இதை உறுதிசெய்ய அறக்கட்டளையின் முக்கிய நிர்வாகிகளான சம்பத் ராய், அனில் மிஸ்ரா மற்றும் கோபால் ராவ் ஆகியோரிடமிருந்து சில முக்கிய ஆவணங்களை எஸ்அய்டி கோரியுள்ளது.
