அரசுப் பள்ளிகளில் மட்டுமே பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் தெலங்கானா கிராம மக்கள் ஒருமனதாகத் தீர்மானம்!

1 Min Read

நிர்மல், ஜூன் 10- தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகின்றனர்.

தெலங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டத்தில் லட்சுமண் சந்தா எனும் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள். சமீபத்தில் இக்கிராம மக்கள் அனைவரும் ஒன்றுகூடி, தங்களது பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர்.

இந்த ஆலோசனையின் முடிவில், கிராமத்தினர் அனைவரும் ஒருமனதாக ஒரு முக்கிய முடிவை எடுத்தனர். அதன்படி, “தங்களது பிள்ளைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் மட்டுமே சேர்க்க வேண்டும்; எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கக் கூடாது” எனத் தீர்மானம் நிறைவேற்றினர்.

அரசுப் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம் குறித்து அந்த ஊராட்சியின் மன்றத் தலைவி படிகலா லட்சுமி கூறுகையில்:

“அரசுப் பள்ளிகளில் தான் நன்கு தகுதிபெற்ற, படித்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். மேலும், பிள்ளைகள் விளையாடுவதற்குப் பரந்த விளையாட்டு மைதானம், அறிவியல் சோதனைக் கூடம் எனப் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதனால், தனியார் பள்ளிகளைத் தவிர்த்து, எங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்,” என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். தனியார் பள்ளிகளை நோக்கிப் பெற்றோர்கள் படையெடுக்கும் இந்நாட்களில், அரசுப் பள்ளிகளின் தரத்தை நம்பி ஒரு கிராமமே திரண்டு வந்து எடுத்துள்ள இந்த முடிவு சமூக வலைத்தளங்களில் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *