அரசியல் பேரிடர் காலத்தில் இருந்து தமிழ்நாட்டை நிச்சயம் மீட்போம்! உதயநிதி நம்பிக்கை!

1 Min Read

சென்னை, ஜூலை 6- திருவேற்காட்டில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழா நேற்று (5.7.2026) நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இணையர்களை வாழ்த்தினார்.

இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “இன்று நாட்டில் என்ன நடக்கிறது என்பதை, நீங்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். சில பேர் சோஃபா வந்த உடனே நம்மை விட்டுவிட்டுச் சென்றிருக் கிறார்கள்.

ஆனால், நீங்கள் அத்தனை பேரும் நாங்கள் என்றைக்கும் திமுகவுடன் இருப்போம் என்று உறுதியோடு வந்திருக்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கும் திமுகவுக்குமான உறவை யார் நினைத்தாலும் பிரிக்க முடியாது, உங்களுக்கு திமுக என்றைக்குமே ஒரு காவல் அரணாக இருக்கும்.

இப்பொழுது ஏற்பட்டிருக்கக்கூடிய இந்த அரசியல் பேரிடர் காலத்திலும் நம் தமிழ்நாட்டை நிச்சயம் உங்களுக்காக நின்று காப்போம், தமிழ் நாட்டை மீட்போம்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *