கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் – 30.4.2026

1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

< தலையிட வேண்டிய அவசியமில்லை வெறுப்பு பேச்சுகளை தடுக்க போதுமான சட்டங்கள் உள்ளன: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

< ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா நடத்தும் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு; பாதுகாப்பு செயலாளர் ஹெக்செத் மீது கேள்விக் கணை தொடுக்க அமெரிக்க காங்கிரஸ் முடிவு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

< ஜே.என்.யு. ஆர்.எஸ்.எஸ். சார்பு துணை வேந்தரை நீக்க கோரிக்கை: பல்கலைக்கழகத் துணைவேந்தர் சாந்திசிறீ துலிப்புடி பண்டிட் மீது, “அதிகாரத்தின் அப்பட்டமான அதிகார மீறல்” மற்றும் நிறுவன விதிமுறைகளின் தொடர் மீறல்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவரை பதவியிலிருந்து நீக்குமாறு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (JNUTA), பல்கலைக்கழகத்தின் ‘விசிட்டரான’ (Visitor)  குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கோரியுள்ளது.

தி இந்து:

< முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களை புறக்கணித்து, தொடர்பில்லாத விவகாரங்களில் தலையிடுகிறது தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு (NHRC) குட்டு வைத்து அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அதுல் சிறீதரன் கடுமையான விமர்சனம்.

< எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான உச்சவரம்பை நீக்கியது தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி): ‘இளங்கலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறைகள், 2023’இல் இடம் பெற்றிருந்த, “கூடுதல் இடங்களை நாடும் கல்லூரிகள் 2024-2025ஆம் ஆண்டு முதல் மொத்தம் 150 எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு மேல் சேர்க்கை வழங்கக்கூடாது” என்ற இரண்டு முக்கிய விதிகளை நீக்கி உத்தரவு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

< அரசுடனான முரண்பாடுகளுக்காக ‘கல்வி உரிமைச் சட்டம்’ (ஆர்டிஇ) சேர்க்கையை மறுக்கக் கூடாது: பள்ளிகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *