கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.5.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

* தவெக சட்டமன்ற தலைவராக விஜய் தேர்வு. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்; 2 வாரத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதாக அறிவிப்பு: நாளை பதவியேற்பு?

* தவெகவுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பினார்; விஜய் ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது குறித்து தமிழக காங்கிரஸ் முடிவெடுக்க அறிவுறுத்தல்: கே.சி.வேணுகோபால் பேட்டி

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பல்ல, அது ஒரு சதி; ராஜினாமா செய்ய மாட்டேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி.

* உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 38ஆக உயர்வு: ஒன்றிய அமைச்சரவை அனுமதி

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தமிழகத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலினின் ‘நம்பிக்கை தோற்கவில்லை’ என்ற செய்தி: “நாம் ஆளும் கட்சியாக இருந்தால், மக்களுக்கான திட்டங்களை வகுப்போம்; நாம் எதிர்க்கட்சியாக இருந்தால், மக்களின் கோரிக்கைகளுக்காக போராடுவோம். அந்த வகையில், இப்போது ஒரு வலுவான எதிர்க்கட்சியாக, மக்களுக்கான அரசியலை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி ஹிந்து:

* திவிகவிற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் முன்வந்துள்ளது; ஆனால் ஒரு நிபந்தனையுடன். தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள திவெக, பாஜகவிடமோ அல்லது அதன் கூட்டணிக் கட்சிகளிடமோ ஆதரவு கோரக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கூறியுள்ளது; இன்று ஆளுநரைச் சந்திக்க வாய்ப்புள்ள விஜய்க்கு ஆதரவு அளிப்பது குறித்து CPI(M) (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) முடிவெடுக்க உள்ளது.

தி டெலிகிராப்:

* ஒன்றிய அரசின் கல்வி மசோதா சர்ச்சை: கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி குறித்து வி.பி.எஸ்.ஏ. (VBSA) முன்மொழிவு கவலைகளை எழுப்புகிறது. தற்போதைய உயர்கல்வி அமைப்புகளை மாற்றிவிட்டு, புதிய ஒழுங்குமுறை அமைப்பை அமைப்பதற்கான முன்மொழிவு வந்துள்ள நிலையில், பாடத்திட்ட ஆராய்ச்சி மற்றும் அங்கீகாரம் மீதான மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து சிவில் சமூக அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *