தி.மு.க.வின் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனைக் குழு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 1– திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணி களை மேற்கொள்வதற் காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அமைத் துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவு வெளி யான உடனேயே கட்சித் தொண்டர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்து, அதற்காக 19 குழுக்கள் அமைக்கப் பட்டன.

இந்த ஆய்வுக் குழுவில் 38 பேர் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாடு முழுவதும் பயணித்த இவர்கள், ஆராய்ந்து அறிக்கைகளை தயாரித்து என்னிடம் வழங்கியுள்ளனர்.

புத்துணர்ச்சி

இவர்கள் அனைவ ருமே திமுகவின் மறுசீரமைப்பையே வலியுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எம்.அப்துல்லா, ச.முரசொலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழரசி ரவிக்குமார், இ.பரந்தாமன், எழிலன் மற்றும் எஸ்.கே.பி.கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மறுசீரமைப்பு

இந்தக் குழுவானது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயும். மேலும், தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்கான நிரந்தர அமைப்பு மற்றும் தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கும் ஓர் அமைப்பை உருவாக்குவது குறித்தும் தனது பரிந்துரைகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கும். அதன்பின், திமுகவின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *