டெக்கான் கிரானிக்கல், சென்னை
* பொது இடங்களில் கால்நடைகளை வெட்ட தடை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு. தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சிகள் சட்டம் விலங்குகளை பலியிடு வதை முறைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே தவிர தடை செய்வதற்காக உருவாக்கப்படவில்லை.எனவே சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* ‘பாடல் மற்றும் நடனம்’ மட்டும் இந்துத் திருமணம் ஆகாது; பதிவு செய்வது மட்டுமே அதைச் செல்லு படியாக்காது: குஜராத் உயர் நீதிமன்றம். திருமணம் சட்டப்பூர்வமாக செல்லுபடியாக முக்கியச் சடங்குகள் அவசியம்: குஜராத் நீதிமன்றம் தீர்ப்பு. வழக்கமான சடங்குகள் நடந்தால் மட்டுமே அத்திருமணம் சட்டப்படிச் செல்லும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தி இந்து
* முதலமைச்சர் விஜய் மீது காவல்துறை வழக்கு பதிய அனுமதி கோரி ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம். முதலமைச்சர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ பொதுவெளியில் ஒப்புக்கொண்டுள்ளார். திமுக எம்எல்ஏக்களை பதவி விலக வைக்க முதலமைச்சர் விஜய், வைகோ கூட்டுச்சதி. விஜய் – வைகோ இணைந்து கூட்டுச் சதி செய்ததை அவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.
தி டெலிகிராப்
* யு.ஜி.சி. நெட் (UGC NET) ஆங்கிலத் தாளில் 67 கேள்விகள் மீண்டும் இடம் பெற்ற விவகாரம்: தேசிய தேர்வு முகமை மீது முன்னாள் துணைவேந்தர்களும் ஆசிரியர்களும் கடும் அதிருப்தி. இந்த ஆண்டு நடைபெற்ற தேசியத் தகுதித் தேர்வின் (NET) ஆங்கிலப் பாடத்தாளில் உள்ள 150 கேள்விகளில் 67 கேள்விகள், இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய வினாத்தாளில் உள்ள கேள்விகளையே ஒத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணி மற்றும் முனைவர் பட்டப் (PhD) படிப்பு ஆகியவற்றுக்கான ஒருவரின் தகுதியைத் தீர்மானிக்க இந்தத் தேர்வின் மதிப்பெண்கள் பயன்படுத்தப்படுகின்றன.
– குடந்தை கருணா
