டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*டில்லியில் 8ஆம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணிப்பு: காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என திட்டவட்ட அறிவிப்பு.
*நீட் மறு தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை- மோடி அரசு கல்வி முறையை சீரழித்து விட்டது: ராகுல் காந்தி.
* உயர்கல்வித் தகுதி பெற்றவர்கள், அரசின் கீழ் நிலை பதவிகளுக்கு விண்ணப்பிக்க கூடாது; குறைந்த கல்வி பெற்றவர்களின் வாய்ப்பை பாதிக்கும், உச்சநீதிமன்றம் கருத்து.
* திருப்பரங்குன்றம் தீப சர்ச்சையில், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும் மதுரை நீதிமன்ற தீர்ப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை ஆணையில் தலையிட முடியாது, உச்சநீதிமன்றம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* மோடி அமெரிக்கா மற்றும் செல்வந்தர்களின் நலனுக்காகச் செயல்படுகிறார் என்கிறார் ராகுல் காந்தி. “இன்று, அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளில் இருந்து மட்டுமே நம்மால் எண்ணெய் வாங்க முடியும். இந்த முக்கியமான பாதுகாப்பை நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தகர்த்து விட்டனர்,” என குற்றச்சாட்டு.
தி இந்து:
* மணிப்பூரில் உள்ள குக்கி அமைப்பு வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு (SIR) எதிர்ப்பு. மோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR), ஆயிரக்கணக்கான உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை (IDPS) சமூகத்திலிருந்து விலக்கியுள்ளது என்று குற்றம் சாட்டி, ஒரு உயர்மட்ட குக்கி அமைப்பு அதை எதிர்த்துள்ளது.
தி டெலிகிராப்:
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு (MGNREGA) மாற்றான திட்டத்திற்கு, சிவில் அமைப்புகள் எதிர்ப்பு. கருத்துக்கேட்கும் செயல்முறை ஒரு கேலிக்கூத்து என்று குற்றம் சாட்டி, ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்படுவதற்கு முன்பு புதிய ஊரக வேலைவாய்ப்புச் சட்டத்தை நிறுத்தக் கோரியும், விரிவான கலந்தாய்வுகளை நடத்தக் கோரியும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட சங்கர்ஷ் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.
– குடந்தை கருணா
