நாளை நடக்கவிருந்த (டெட்) TET தேர்வு ஒத்திவைப்பு வினாத்தாள் கசிந்ததால் அதிர்ச்சி!

2 Min Read

மும்பை, ஜூன் 29- நாடு முழுவதும் கல்வி வாரியத் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வு களின் நம்பகத்தன்மை குறித்த விவாதங்கள் எழுந்துள்ள சூழலில், மகாராட்டிராவில் மற்றொரு தேர்வு சர்ச்சை வெடித்துள்ளது.

மாநிலம் முழுவதும் நாளை நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத் தாள் முன்கூட்டியே கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, தேர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

இன்று அதிகாலை வேளையில் பிவாண்டி பகுதியில் உள்ள சில நபர்களிடம் தேர்வு தொடர்பான ரகசியத் தகவல்கள் இருப்பதாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சில ஆவணங்களைச் சரிபார்த்த போது, அதில் இருந்த வினாக்களும், நாளை தேர்வு மய்யங்களுக்கு அனுப்பப்படவிருந்த அசல் வினாத்தாளின் கேள்விகளும் அப்படியே ஒத்துப்போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது பிவாண்டி காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மறுதேதி பின்னர் அறிவிப்பு..

சூழலின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, 1,028 மய்யங் களில் லட்சக்கணக்கான பேர் எழுதவிருந்த இந்தத் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்படுவதாகத் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட் டுள்ளதாகவும், மாற்றுத் தேர்வுக்கான தேதிகள் மற்றும் புதிய விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியாகும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பேப்பர் லீக் அரசு”
– வெடித்த அரசியல் சர்ச்சை..

வினாத்தாள் லீக் ஆனதையடுத்து ஏற்கனவே நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு, சர்ச்சைகளுக்கு மத்தியில் ஜூன் 21ஆம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்பட்டது. இந்த நிலையில் மாநில அளவிலான தேர்விலும் இத்தகைய குளறுபடி நடந்துள்ளது அரசியல் அரங்கில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆளும் பா.ஜ.க கூட்டணி அரசை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆட்சியில் முறைகேடு இல்லாமல் எந்தவொரு அரசுத் தேர்வும் நடப் பதில்லை.

மாணவர்களின் எதிர்காலத் தோடு விளையாடும் இந்த அரசு, ஒட்டுமொத்தமாக ‘பேப்பர் லீக் அரசாக’ மாறிவிட்டது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *