மாணவர் அடையாள அட்டையில் சமூக விவரங்கள் இடம்பெறாது அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்!

2 Min Read

சென்னை, ஜூன் 28- பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சமூக விவரங்கள் (ஜாதி விவரங்கள்) இடம்பெற உள்ளதாக வெளியாகும் தக வல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என்று வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பள்ளிகளிலேயே சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்  மாணவர்கள் எளிதாகவும், விரைவாகவும் வருவாய் துறை சார்ந்த சேவைகளைப் பெறும் நோக்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து பள்ளிகளிலேயே சமூகச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வழங்கி வருகிறது. மாணவர்களின் நலன் கருதி, இ-சேவை மய்யங்கள் மூலமாக இந்தச் சேவைகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாணவர்களுக் கான அடையாள அட்டை குறித்து வெளியான கருத்துக் களால் சில தவறான புரி தல்கள் ஏற்பட்டுள்ளன. மாண வர்களுக்கான சமூகச் சான்றிதழ் வழங்குவதில் மட்டுமே வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து செயல்படும்.

ஆனால், மாணவர் அடை யாள அட்டையின் வடிவமைப்பு மற்றும் அதில் இடம்பெறும் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் முற்றிலும் பள்ளிக் கல்வித் துறையின் பரிசீலனை மற்றும் முடிவிற்கு உட்பட்டவை ஆகும்.

தகவல் பாதுகாப்பு மற்றும் க்யூஆர் (QR) குறியீடு

மாணவர்களின் தனி யுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பிற்கு (Privacy and Data Security) முன்னுரிமை அளிக்கப்படும். எதிர்காலத்தில் ஏதேனும் மின்னணு தகவல் ஒருங்கிணைப்பு மேற்கொள் ளப்பட்டாலும், அதில் கீழ்க் கண்ட அடிப்படை விவரங்கள் மட்டுமே வெளிப்படையாக இடம்பெறும்:

மாணவரின் பெயர் வகுப்பு பள்ளியின் பெயர் ரத்த வகை  இதர முக்கியமான விவரங்கள் அனைத்தும் தேவைக்கேற்ப பாதுகாப்பான க்யூஆர் (QR) குறியீட்டு வடிவில் மட்டுமே அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது குறித்தே தற்போது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறைகளின் விரிவான ஆலோ சனைக்கு பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்பதால், அடையாள அட்டையில் சமூக விவரங்கள் இடம்பெறும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *