திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் 85ஆம் பிறந்த நாள் விழா மற்றும் புகழ்மலர் வெளியீட்டு விழா 16.06.2026 அன்று தஞ்சாவூரில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் புகழ்மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். அப்போது வல்லம், பெரியார் நூற்றாண்டு தொழில்நுட்பக் கல்லூரி முதலாம் ஆண்டு கட்டடத்தில் அமைந்துள்ள ஒரு கூடத்திற்கு திரு. சி.நா.மீ. உபயதுல்லா அவர்களின் பெயரை கீழ்கண்டவாறு சூட்டினார்.
தொண்டறச் செம்மல் சி.நா.மீ. உபயதுல்லா கூடம்
Examplar of Public Service S.N.M. Ubayadullah Block
