புனே, ஜூன் 23 மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் ‘நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த கார்ப்பரேட் சாமியார், பெண் ஒருவரைப் பல்லாண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்து, எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ர வதை செய்துள்ளார். இதுதொடர் பாகப் சாமியார் உட்பட 8 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புனேவில் ‘நவீன குருகுலம்’ ஆசிரமம் நடத்தி வந்த ராதேஷ்யம் மிஸ்ரா என்ற ராதாமோகன் மிஸ்ரா (59) என்பவரைத் தீவிரமாகப் மக்கள் பின்பற்றி வந்துள்ளனர். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று கூறிக்கொள்ளும் இந்தப் பார்ப்பனர், கல்வி அறிவு இல்லாத பெரும் செல்வந்த நிலக்கிழார்களைக் குறிவைத்து மோசடிகளை அரங்கேற்றுவார்
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெரும் செல்வந்த குடும்பத்தினர் ராதாமோகனின் மோசடிப் பேச்சை நம்பி அவருக்கு சேவை செய்ய மகளைத் தனது ஆசிரமத்தில் சேர்த்துள்ளனர். இதனைப் பயன் படுத்திக் கொண்ட மிஸ்ரா, கடந்த 2010 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் அப்பெண்ணைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அதனை ரகசியமாக காட்சிப் பதிவு எடுத்து வைத்துக்கொண்டு, பெண்ணை மிரட்டியுள்ளார்.
எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை
பாதிக்கப்பட்ட பெண் ணின் குடும்பத்தினரிடம் பல்வேறு பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை புனே யிலேயே குடியேறச் செய்த மிஸ்ரா, காட்சிப் பதிவைக் காட்டி மிரட்டி அந்த குடும்பத்தினரிடமிருந்து பெரும் தொகைப் பணம், நகைகள் மற்றும் சொத்துக்களைப் பறித்துள்ளார்.
ஆசிரமத்தில் வலுக்கட்டாயமாகக் கட்டிப்போடப்பட்ட அந்த பெண்ணுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சித்ரவதை செய்ததோடு மட்டுமல்லாமல், தனது சிறுநீரைக் குடிக்க வைக்கும் கொடூரத்திலும் மிஸ்ரா ஈடுபட்டுள்ளதாகப் பாதிக் கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
சாமியார் கைது
மிருகத்தனமான இந்த சித்ர வதைகளில் இருந்து ஒருவழியாகத் தப்பி வந்த அப்பெண், கடந்த
16-ஆம் தேதி புனே காவல் நிலை யத்தில் சாமியாருக்கு எதிராகப் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சாமியார் ராதாமோகன் மிஸ்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் 7 பேர் என மொத்தம் 8 பேரை அதிரடியாகக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் அனைவரும் தற்போது நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
ரகசிய சுரங்கப் பாதை
கைதைத் தொடர்ந்து சாமியாரின் ஆசிரமத்தில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு இருந்த ஒரு ரகசிய அறையைக் கண்டுபிடித்த காவல்துறையினர் அங்கி ருந்து ஏராளமான பொருட் களைப் பறிமுதல் செய்தனர். ஆசிரமத்தில் இருந்து ஏராளமான லேப்டாப்கள் கைப்பேசிகள், இதர மின்னணு சாதனங்கள், ரூ. 6.5 லட்சம் ரொக்கப் பணம், ரூ. 15 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ஏராளமான மாத்திரைகள் ஆணுறைகள், கருத்தடை தொடர்பான மருந்துகள் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஹார்ட் டிரைவ் மற்றும் பென் டிரைவ்களில் பல பெண்களின் ஆபாச காட்சிப் பதிவுகள் இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். இதே பாணியில் இன்னும் பல பெண்கள் சீரழிக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. காவல் துறையினரின் முதற்கட்ட ஆய்வில், ஆசிரமத்திற்குள் ரகசிய மாகச் சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டு வருவது கண்டு பிடிக்கப்பட்டது. ஏதேனும் ஆபத்து அல்லது காவல்துறை சோதனையின் போது, ஆசிரமத்திலிருந்து தப்பி ஓடுவதற்காகவே மிஸ்ரா இந்த சுரங்கப் பாதையைத் திட்டமிட்டு அமைத்து வந்ததாகப் காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.
