திருச்சி, ஜூன் 23- இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2026 ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை, போரூர் சிறீஇராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 20.06.2026 அன்று நடைபெற்றது.
இதில் திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் கோ.கிருஷ்ணமூர்த்தி கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாக பேராசிரியராக சிறப்பாக செயல்பட்டு வருவதனை பாராட்டி இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு பிரிவு 2026 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருதினை வழங்கி சிறப் பித்துள்ளது.
இவ்விருதினை தமிழ்நாடு மாநில மருந்தியல் கழகத்தின் தலைவர் ஜெ. ஜெயசீலன் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் செயலாளர் முனைவர் எஸ். வின்சென்ட் ஆகியோர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சி இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ் நாடு பிரிவுத் தலைவர் முனைவர் வீ.சங்கர், துணைத் தலைவர் முனைவர் சி. கந்தசாமி மற்றும் செயலாளர் முனைவர் ஆர். சம்பத் குமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் மருந்தியல் துறை யில் சாதனை படைத்த பல்வேறு பேராசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
