என்.டி.ஏ. ஆட்சி அமைந்து 50 நாளாகியும் அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காத புதுவை முதலமைச்சர் ரங்கசாமி

2 Min Read

புதுச்சேரி, ஜூன் 26- புதுவையில் தேஜ கூட்டணி ஆட்சி 50 நாட்களை கடந்தும் அமைச்சர்களுக்கு முதல மைச்சர் இலாகா ஒதுக்காததால் முதலமைச்சர் ரங்கசாமிமீது பாஜக கடும் கோபத்தில் உள்ளது. புதுவையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 18 இடங்களை கைப்பற்றி தேஜ கூட்டணி ஆட்சி யமைத்தது. அய்ந்தாவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் பொறுப்பேற்றனர். ஆனால் அவர் களுக்கு உடனடியாக இலாகா ஒதுக்கப்படவில்லை.

தொடர்ந்து அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவும் இல்லை. நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த 17ஆம் தேதி என்.ஆர் காங்கிரசை சேர்ந்த சிவக்கொழுந்து, ராஜவேலு பாஜகவை சேர்ந்த ஜிஎன்.எஸ் ராஜசேகரன் ஆகி யோர் அமைச்சர்களானார்கள். அதன்படி மொத்தமுள்ள 5 அமைச் சர்களுக்கு இலாகா ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை ஒதுக்கப்படவில்லை. பேரவைத் தலைவர் பதவி தங்களுக்கு வேண்டும், மேலும் 3 நியமன சட்ட மன்ற உறுப்பினர்களில் ஒன்று தர வேண்டுமென பாஜகவிடம் முதல மைச்சர் ரங்கசாமி வலியுறுத்துகிறார்.

அதே நேரம், முக்கிய இலாகாவை கேட்டு பாஜகவும் விடாப்படியாக இருப்பதால், இலாகா ஒதுக்குவதற்கு ரங்கசாமி முன்வரவில்லை. அமைச் சர்களுக்கு இலாகா ஒதுக்குவது எனது தனிப்பட்ட உரிமை, எப் போது ஒதுக்க வேண்டுமென தோன்றுகிறதோ, அப்போது ஒதுக்கப் படும் என ரங்கசாமி கூறுவது பாஜக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி யுள்ளது.

இலாகா ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த பாஜக மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை, வீட்டுக்குள் அழைத்து மரியாதையாக பேசாமல், டென்னிஸ் மைதானத்தில் நிற்க வைத்து பேசி அனுப்பிவிட்டார் ரங்கசாமி. ஒரு கட்டத்தில் பாஜக இறங்கி வந்தாலும், ரங்கசாமியின் பிடிவாதப்போக்கு, ஈகோவும் பாஜக தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

தேர்தல் முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியானது, இன்றுடன் புதுச்சேரியில் 50 நாட்களை கடந்து விட்டது. அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அரசு நிர்வாகம் முழுமையாக செயல்பாட்டுக்கு வராமல் தேங்கியுள்ளது. இதுகுறித்து முதலமைச்சரிடம் கேட்டபோது, எந்த பணியும் பாதிக்கவில்லை, எல்லாம் சரியாக நடக்கிறது என தெரிவித்ததையும் பாஜக முழுமையாக ரசிக்கவில்லை.

வெறிச்சோடி கிடக்கும்
புதுச்சேரி சட்டமன்றம்

அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்காததால் அமைச்சர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வருகின்றனர். அவர்களை நாடி வரும் ஒருசிலரிடம் பேசிவிட்டு வீட்டுக்கு திரும்புகின்றனர். எந்த துறையும் ஒதுக்காததால் அவர்களை எந்த அதிகாரிகளும் பார்ப்பதில்லை. துறைகள் ஒதுக்காததால் பொது மக்கள், தங்களது துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அனைத்து துறைகளும் வைத்திருக்கும் முதலமைச்சர் ரங்கசாமியை எளிதில் சென்று பார்க்க முடியவில்லை என்ப தால் யாரும் சட்டமன்றத்திற்கு வருவ தில்லை. இதனால் சட்டமன்றம் வெறிச்சோடி கிடக்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *