கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 21.6.2026

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டில்லியில் தட்டுகள், கரண்டிகளைத் தட்டி முழக்கம்; அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை கலைய மாட்டோம் என்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவிப்பு. போராட்டத்தை நீட்டிக்க காவல்துறை அனுமதி மறுப்பு.

* கருநாடகா மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் நீட் மறுதேர்வு மய்யம்: ஒன்றிய அரசுக்கு ராகுல் கடும் கண்டனம்

தி இந்து:

* “நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாகும்” என்று தவெக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம். “கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக் காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் நான் முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன்” என சமூக வலைத்தளத்தில் பதிவு.

தி டெலிகிராப்:

* தொகுதி மறுவரையறைக்கான வியூகம்: மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்றப் பெரும்பான்மையைப் பெற பாஜகவின் திட்டம். “நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது மழைக்கால கூட்டத் தொடருக்குள் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதைக் கொண்டு அரசமைப்பு சட்டத் திருத்த மசோதா, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா – தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்றுவோம்” என்று ஒன்றிய அமைச்சராக உள்ள பாஜக மூத்த தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ‘யாருக்குப் பாதுகாப்பு அளிக்கிறேன் என்பதை அறிய விரும்புகிறேன்’: மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதத்தை நியாயப்படுத்திய பிரியங்க் கார்கே; ஆர்.எஸ்.எஸ் அறிக்கையின்படி, கருநாடகா முழுவதும் 20 லட்சம் பேர் மீண்டும் மீண்டும் ஒன்று கூடும் போது, அவர்கள் யார் என்பதையும், எதற்காக ஒன்று கூடுகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வது யாருடைய கடமை?” என்று கார்கே செய்தியாளர்களிடம் கூறினார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *