பெரியார் பன்னாட்டு அமைப்பின் விருது பெற்ற
நம் கவிஞருக்கு வாழ்த்து மடல்
அய்யாவின் அடிச்சுவட்டில் அணையாத தீபமெனும்
அருந்தமிழ்த் தலைவரின் அருமந்த தோழனாய்
பருந்தும் நிழலுமாய்ப் பெரியார் மண்ணில்
இருந்தும் உழைத்தும் எந்நாளும் வாழியரோ!
நீர்க்குள் பாசியாய்த் தமிழக ஓடையில்
வேர் கொளத் துடிக்கும் வேதம் ஓதிகளின்
மனு அதர்மக் கோட்பாட்டை மாறாது போற்றிடும்
திமிரினை அடக்கித் திறம்பட வாழியரோ!
அமெரிக்க நண்பர்கள் அன்புடன் அளித்திட்ட
வீரமணி விருதினை மகிழ்வுடன் ஏற்று
சமூக அரசியல் ஜாதிக்கு எதிரான
பழமையைத் துடைத்திடும் பண்புடன் வாழியரோ!
மின்சாரம் எனும் பெயரால் ஆரியம் அதிருது.
கட்டுரை, கவிதை கணக்கின்றிப் படைத்திடும்
பூங்குன்றன் என்றாலும் பொங்கி எழும்போது
பூதேவர் என்போரின் பூணூல் பொசுங்குது.
பெரியார் மனையின் ஆஸ்தான கவிஞரென
பேரறிஞர் வீரமணி பேருவகை பொங்கிட
புன்னகை மலிந்திடப் பொன்னாடை போர்த்தியதை
இந்நாளில் ஏற்றிட்டீர் எந்நாளும் வாழியரோ!
– பழனி. அரங்கசாமி,
தஞ்சாவூர்
கவிதை
Leave a Comment
