கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

21.2.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும், முத்தரசன் பேட்டி.
* மும்மொழி கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக இளைஞர் அணி சார்பில் தொகுதி தோறும் கண்டன பொதுக்கூட்டம்: உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்.
* இந்திய தேர்தலுக்கு 21 மில்லியன் டாலர் அமெரிக்க நிதியுதவி ஏன்? யாரை தேர்வு செய்ய முயற்சி? டிரம்ப் கேள்வி. வெள்ளை அறிக்கை வெளியிட மோடி அரசுக்கு காங்கிரஸ் கோரிக்கை.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* மோடி அரசை புகழ்வதில் ஊடகங்கள் அதிகம் கவனம் செலுத்துகின்றன. மக்கள் பிரச்சனைகளை அதிகம் கூறுவதில்லை, ராகுல் கவலை.
* யு.ஜி.சி. வரைவு அறிவிக்கை மாநில உரிமைகளை பறிக்கிறது என கேரள அரசு சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய தெலங்கானா துணை முதலமைச்சர் மல்லு பட்டி குற்றச்சாட்டு. அடுத்த கருத்தரங்கம் அய்தராபாத்தில் நடைபெறும் என அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* கும்பமேளா காரணமாக கங்கை குளிக்க லாயக்கற்றது என ஒன்றிய அரசின் மாசு கட்டுப்பாடு வாரியம் கூறியதைத் தொடர்ந்து, “ஒவ்வொரு பாஜக தலைவரும் கங்கை நீரை நிரப்பிய தொட்டியை பெற்று, சமைக்க, குளிக்க மற்றும் தேவைப்படும்போது மருந்தாக கூட குடிக்க வேண்டும். அதை பாஜக ஏற்றுக் கொள்ளுமா,” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் உ.பி.ஆளும் கட்சியான பாஜகவுக்கு சவால் விடுத்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து இருந்தால் பாஜக 2024 தேர்தலில் தோற்றிருக்கும் என ராகுல் பேச்சு.
* மாநில அரசு நீண்ட காலமாக ஏற்றுக் கொண்ட இரு மொழிக் கொள்கைக்கு எதிரான ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதை ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில் காட்டி நிர்ப்பந்திப்பதாக? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேள்வி.
தி இந்து:
* யு.ஜி.சி. வரைவு அறிவிக்கை தொடர்பாக கேரள அரசு நடத்திய மாநாட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கருநாடகா மாநில உயர்கல்வித்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். யுஜிசி நுழைவுத்தேர்வு முறையால் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரிக்கும்: திருவனந்தபுரம் தேசிய மாநாட்டில் அமைச்சர் கோவி. செழியன் பேச்சு
தி டெலிகிராப்:
* ஜார்க்கண்ட்: வினாத்தாள் கசிந்ததை தொடர்ந்து ஹிந்தி மற்றும் அறிவியல் பாடங்களுக்கான வாரிய தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.
.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *