பழனி, ஜூன் 21- பழனி மாவட்ட திராவிடர் கழக அலுவலகத்தை திண்டுக்கல் மாவட்ட கழகத் தலைவர் இரா.வீரபாண்டியன் தலைமையில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் 19.6.2026 அன்று பகல் 2 மணிக்கு திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலாளர் பொன்.அருண்குமார் வரவேற்றார். பழனி மாவட்டத் தலைவர் பி.ஆர்.பி. ஆனந்தகிருட்டிணன், மாவட்டச் செயலாளர் மாவட்ட இணைச் செயலாளர் ஆ.இராமகி ருட்டிணன், பழனி ஒன்றியச் செயலாளர் சி.இராதாகிருட்டிணன், பழனி நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
26.6.2026 அன்று சின்னாளப்பட்டியில் “எதிர்நீச்சலில் வென்ற பெரியார்-80ஆம் ஆண்டு விழா, திறந்தவெளி மாநாடு” அழைப்பினை திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண் டியன் வழங்கினார்.
