அரூர் மாவட்ட கழக அவசர ஆலோசனைக் கூட்டம்

திராவிடர் கழக தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திராவிடர் கழக எழுச்சி நாள், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 103 -ஆம் ஆண்டு பிறந்த நாள், தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் சார்பில் 103 கூட்டங்கள் நடத்திட  அறிவித்துள்ளார்கள்.

அரூர் கழக மாவட்டத்தில் 5.6.2026 மற்றும் 9.6.2026 ஆம் தேதிகளில் பரப்புரைக் கூட்டம் நடத்த தேதி ஒதுக்கி உள்ளார்கள்.

எனவே மேற்கண்ட நிகழ்ச்சி  நடத்துவது குறித்து 27.5.2026 புதன்கிழமை மாலை 4 மணி அளவில் பாப்பி ரெட்டிப்பட்டி பெரியார் படிப்பகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து கழக அணி தோழர்களும் பொறுப்பாளர்கள் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அழைப்பு:  அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட கழக தலைவர்,  கு.தங்கராஜ் மாவட்ட கழக செயலாளர்,       அரூர் கழக மாவட்டம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *