குமாரபாளையத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா

2 Min Read

திராவிடர் கழகம்

குமாரபாளையம், ஜூன் 17– முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருச்செங்கோடு கழக மாவட்டத்தின் சார்பில் குமாரபாளையம் உழவர் சந்தை திடலில் மாலை 5.30 மணி அளவில் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது

மாவட்டக் கழகத் தலைவர் சு.சர வணன் தலைமை வகித்தார். மாவட்டக் கழகக் காப்பாளர் ஆ.கு.குமார் வரவேற் புரையாற்றினார்.

நகர மன்ற துணைத் தலைவர் கோ.வெங்கடேசன், நகர பொறுப்பு குழு உறுப்பினர் திமுக கே.ஏ.ரவி, நகரபொறுப்பு குழு உறுப்பினர் திமுக சி.செந்தில்குமார், சண்முகம், மு.சாமிநாதன், மாவட்ட கழகச் செயலாளர் ஆனந்தகுமார் கணேசன், பொதுக்குழு உறுப்பினர் க.பொன்னுசாமி, மூணாங்கரடு சேலம் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்டத் துணைத் தலைவர் வெ.மோகன், மாவட்டத் துணைச் செயலாளர் மு.சீனிவாசன் பொதுக்குழு உறுப்பினர் இலப செல்வகுமார் நகரச் செயலாளர் ஆ காமராஜ் ஆகியோர் உரையாற்றினர்.

தொடக்க உரையாக ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர் திராவிடர் கழகம்), சிறப்புரையாக பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்) பேச்சை ஆரம்பித்திலிருந்து முடிக்கும் வரை முத்தமிழ் அறிஞர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் நடந்த பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வரிசைப்படுத்தி மிக சிறப்பான முறையில் உரையாற்றினார்.

இந்நிகழ்வில் பங்குபெற்ற திமுக வின் பொறுப்பாளர்கள் எம்.செல் வம் முன்னாள் நகர செயலாளர், பி.ஜெயபிரகாஷ் முன்னாள் செயலாளர், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கே.ஏ.ரவி, எம்.செந்தில்குமார், சீ.செல்வகுமார், எம்.தேவிமணி, மல்லை மு.ராமநாதன் மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர், ஏ.வெங்கடேசன் மாவட்ட தொண்டர் அணி துணை அமைப்பாளர், பி.பாண்டியன் மாவட்ட வர்த்தகர்அணி, துணையமைப்பாளர் ராதிகா சக்திவேல், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர், பி. கயல்விழி மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர், ஆர்.ராதாகிருஷ்ணன் மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர்

வார்டு செயலாளர்கள் ச.முருகன், மணிகண்டன், சந்தான ஐயப்பன் மற்றும் புவனேஷ், கே.மனோரஞ்சிதம், கே.சரஸ்வதி, எம்.சமிமா பேகம், பி.தனலட்சுமி, எஸ்.லதா, எஸ்.ஜோதி, என்.ஈஸ்வரி, ஏ.மகேஸ்வரி, எஸ்.உமா, டி.செல்வி, பி.நளினி

நிகழ்வில் கலந்து கொண்ட திராவிடர் கழக தோழர்கள் பொறுப்பாளர்கள் வடிவேல், பிரகாசு, மாதேஸ்வரன், செல்வராசு, சந்திரா, மணியம்மை, ராஜேஸ்வரி, சங்கீதா, ச.பத்மாவதி, த.ரம்யா நகர மகளிர் அணி அமைப்பாளர்,  எ.இந்துமதி  நகர மகளிர் பாசறை அமைப்பாளர், ச.தமிழ்ச்செல்வன், ச.எழிலரசன், ச.தமிழரசன், நகர கழக மற்றும் பொறுப்பாளர்கள் தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக நகர தலைவர் ராசசேகர் நன்றி கூறினார். திருச்செங்கோடு கழக மாவட்டத்தின் சார்பாக இனிதே கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *