அயோத்தி, ஜூன் 16 மோடி திறந்து வைத்த அயோத்தி ராமன் கோயி லுக்கு திருப்பதி போன்று நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் காணிக்கைகளை வழங்கி வருகின்றனர். இவ்வாறு உண்டியல்கள், நன்கொடை மய்யங்கள் மூலம் சேரும் பணத்தைக் கணக்கிடும் மிக முக்கியப் பொறுப்பில் லவ்குஷ் மிஸ்ரா என்ற ஊழியர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த வாரம் கோயில் கணக்கு களில், உண்டியல் வசூலில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சந்தேகத்தின் அடிப்படையில் லவ்குஷ் மிஸ்ராவின் வீட்டை காவல் துறையினர் 14.6.2026 அன்று சோதனை செய்தனர்.
வீட்டின் பல இடங்களில் தேடியும் ஆரம்பத்தில் பெரிய அளவில் எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் வீட்டின் பின்புறம் தொழுவப் பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு குவித்து வைக்கப்பட்டி ருந்த மாட்டுச் சாணத்தின் அடியில் உள்ள ஒரு மூட்டையில் ரூ.12 லட்சம் இருப்பது தெரியவந்தது.
லவ்குஷ் மிஸ்ராவைக் கைது செய்தனர். இந்தத் திருட்டுச் சம்பவத்தில் லவ்குஷ் மிஸ்ராவுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதா அல்லது கோயிலைச் சேர்ந்த வேறு சில உயரதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் பங்கிருக்கிறதா என்ற கோணத்தில் காவல்துறை யினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
