மதுரை, ஜூன் 15 தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் புதிய அமைச்சர் பொறுப்பேற்றதை அடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளால், மாநிலம் முழுவதும் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாகப் பல மாவட் டங்களில் தற்காலிக ஊழியர்கள் வேலை இழந்துள்ளதோடு, முடிக்கப் பட்ட பணிகளுக்கான தொகையும் வழங்கப்படாமல் ஒப்பந்ததாரர்கள் பரிதவித்து வருகின்றனர்.
4 ஆயிரம் தற்காலிக ஊழியர்களின்
வாழ்வாதாரம் பாதிப்பு
தமிழக நெடுஞ்சாலைத்துறை யின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் 40 கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கிய சாலை கள் என மொத்தம் 73,150 கி.மீ தூர சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. இத்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாததால், பொறியா ளர்களுக்கு உதவியாக 5 மாவட்டங்களைக் கொண்ட ஒரு சரகத்திற்கு 500 பேர் வீதம், தமிழ்நாடு முழுவதும் 4,000-க்கும் மேற்பட்டோர் தினக்கூலி அடிப்படையில் தற்காலிகமாகப் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு மாதச் ஊதியமாக ரூ.8,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்பட்டு வந்தது.
நிதி நிறுத்தம்
இந்நிலையில், நெடுஞ் சாலைத்துறை அமைச்சராக ஆதவ் அர்ஜூனா பொறுப் பேற்ற பின், திட்டப் பணிகளுக்கு எவ்வித தொகையையும் வழங்க வேண்டாம் என உத்தரவிட்டதாகக் கூறப்படு கிறது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக சாலை பராமரிப்பு நிதி நிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்காலிக ஊழியர்கள் கூறுகையில்: “ஆண்டுதோறும் மாவட்டங் களுக்கு வழங்கப்படும் சாலை பராமரிப்பு நிதி நிறுத் தப்பட்டதால், பணிகள் முடங்கியுள்ளன. இதனால் நிதி இல்லை எனக் கூறி அதிகாரிகள் எங்களை பணிநீக்கம் செய் துள்ளனர். 5 முதல் 15 ஆண்டுகள் வரை வேலை செய்த எங்களை திடீரென நீக்கியதால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. தென்மாவட்டங்களில் மட்டும் இந்த பணியை நம்பி இருக்கும் பலர் வேலையிழந்துள்ளனர்,” என வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, நிதி நிறுத்தப்பட்டதால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க முடியாமல் பொதுமக்கள் தரப்பில் எழும் புகார்களுக்குப் பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகப் புலம்புகின்றனர்.
பொதுப்பணித்துறையிலும் முடக்கம்
இதே நிலை பொதுப் பணித்துறையிலும் நீடிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி, கல் லூரி மற்றும் அரசு அலுவல கக் கட்டிடங்களைக் கட் டும் பணிகளைப் பொதுப் பணித்துறை மேற்கொள்கிறது.
அமைச்சர் தலைமையில் நடந்த முதல் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, “மறுஉத்தரவு வரும் வரை எந்தத் திட்டங்களுக்கும் பணப்பட்டுவாடா செய்ய வேண்டாம்” என முதன்மை தலைமைப் பொறியாளர் மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பணம் பட்டுவாடா செய்யப் பயன்படும் இணையதள முகவரி மற்றும் அடையாள எண்கள் (ID) முடக்கப்பட்டுள்ளன.
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர் பிறப்பித்த உத்தரவுகளால், தற்காலிக ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோனதுடன், மாநிலத்தின் உள்கட்டமைப்புப் பணிகளும் முடங்கியதால், தமிழ்நாடு அரசு இப்பிரச்சினைக்கு உடன டியாகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
