தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (9.12.2023) தலைமைச் செயலகத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் சந்தித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளத் தொகையான 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி, எம்.பாபு மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.