முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் திராவிடர் எழுச்சி நாள் – கழகப் பரப்புரைக் கூட்டம்

திருச்செந்தூர், ஜூன் 14- திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் நாள் – கழக பரப்புரைக் கூட்டம் 8.6.2026 அன்று மாலை 6 மணிக்கு திருச்செந்தூர் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது.

ஒன்றியத் திராவிடர் கழகத் தலைவர் து.கவுசிக் தலைமையேற்றார். ஒன்றியத் துணைத் தலைவர் பு.சு.பிரவின் வரவேற்புரையாற்றினார். முன்னிலை வகித்த மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் தலைவர் கலைஞரின் சாதனைகளைப் பற்றி பேசினார்.

திராவிட முன்னேற்றக் கழக மாவட்டக் கலை இலக்கிய அணித் துணை அமைப்பாளர் மோ. அன்பழகன், வி.சி.க. மேனாள் மண்டலச் செயலாளர் ஆகியோர் கலைஞரின் ஆட்சி முறை பற்றி விளக்கினர். மனிதி அமைப்பினர் சார்பில் மா.வசுமதிவசந்தி கலைஞரின் கணினி அறிவியல் சாதனையைப் பட்டியலிட்டார்.

இடதுசாரி செயற்பாட்டாளர் பெ.தமிழ்ச்செல்வன் கலைஞரின் கவிதைச் சிறப்பினையும், ஸநாதன ஒழிப்பினையும் விளக்கினார். மாவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம் தொடக்கவுரையாற்றினார்.

சிறப்புப் பேச்சாளர் பொன்.அருண்குமார் உரையாற்றினார். “கலைஞர், பெண்கல்வி, பெண்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் காவலர், பெண்கள் சொத்துரிமை பெண்கள் அரசியல் வாய்ப்பு என வழங்கிய தலைவர், அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கியவர், மக்கள் நலத்திட்டங்களை பல கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிந்தனைக் கருத்துகளை உரமாகக் கொண்டு மீண்டும் வரவைப்பார். திராவிடத்தால் பயன் பெற்ற இளைஞர்கள், மாணவர்கள், மீண்டும் திராவிட மாடல் ஆட் சியை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியைத் தமிழ்நாட்டில் கொண்டு வருவர்“ என்று உரையாற்றி நிறைவு செய்தார்.

ஒன்றிய அமைப்பாளர் இலி.அபிலிங்கேஸ்வரன் நன்றி கூற நிகழ்சசி இரவு 8.50 மணிக்கு நிறைவு பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் தலவைர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். தூத்துக்குடி மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன், கி.கோபால்சாமி, திருவைகுண்டம் ஒன்றிய கழகத் தலைவர் சு.திருமலைக்குமரேசன், திருச்செந்தூர் ஒன்றிய அமைப்பாளர் வே.சுதர் சன், துணைச் செயலாளர் த.மவுரியசேகுவேரா மற்றும் ஏராளமான தோழர்கள், பொது மக்கள் கலந்து கொண்டு உரை யைக் கேட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *