போட்டித் தேர்வுகளில் தொடர் குளறுபடிகள் ஒன்றிய கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி முன்னாள் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் போர்க்கொடி!

புதுடில்லி, ஜூன் 12 தேசிய அளவில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தொடர்ந்து ஏற்படும் குளறுபடிகள், தோல்விகளுக்குப் பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் பதவி விலகவேண்டும் என 73 முன்னாள் அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனவுகள் சிதைந்துவிட்டன

‘அரசியலமைப்பு நடத்தைக் குழு’ என்ற அமைப்பின் கீழ், அகில இந்திய மற்றும் மத்தியப் பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 73 அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து மோடி அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் தற்போதைய கல்வித்துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான வேதனையையும், கவலையும் வெளிப்படுத்துகிறோம். ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கண்காணிப்பில் தொடர்ந்து அரங்கேறி வரும் வினாத்தாள் கசிவு முறைகேடுகள், லட்சக்கணக்கான இளம் இந்தியர்களின் எதிர்காலத்தையும் அவர்களது கனவுகளையும் சிதைத்து விட்டன. நம் ஜனநாயகத்தின் மிக முக்கி யமான அங்கமான பொதுக் கல்வி, தகுதி அடிப்படையிலான தேர்வு முறையின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை இந்த அரசு (மோடி அரசு) முற்றிலுமாகச் சீர்குலைத் துள்ளது. பல ஆண்டுகள் கடு மையாகப் படித்து நீட் தேர்வை எழுதிய 23 லட்சத்திற்கும் அதிக மான மாணவர்களின் வாழ்வாதாரம் வினாத் தாள் கசிவு காரணமாக கேள்விக்குறியாகியுள்ளது. நாட்டின் முதன்மைத் தேர்வு முகமை களின் நாணயம் முற்றிலுமாகச் சிதைந்து போய்விட்டது.

கல்விப் பேரழிவு நிலை

ஒன்றிய அரசு அனைத்தையும் ஒரே மய்யப் புள்ளியில் கொண்டு வர வேண்டும் என்ற பிடிவாதத்தில் இயங்குவதே இந்தத் தோல்விகளுக்கும், முறைகேடுகளுக்கும் காரணம் ஆகும். இளநிலை, உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து விடுத்த கோரிக்கைகளை ஒன்றிய அரசு அலட்சியப்படுத்தியதன் விளைவே தற்போதைய கல்விப் பேரழிவு நிலைக்கு காரணம் ஆகும்.

சிபிஎஸ்இ தேர்விலும்
மெகா குளறுபடி!

நீட் தேர்வு மட்டுமின்றி, சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டி லும் மிகப்பெ ரிய டிஜிட்டல் முறைகேடு நடந்துள்ளது. விடைத்தாள்களை இணை யதளத்தில் திருத்தும் ‘ஆன் ஸ்கிரீன் மார்க்கிங்’ (ஓஎஸ்எம்) என்ற புதிய முறை அவசர அவசரமாக அறிமுகப்படுத்தப்பட்டது ஏன்? என்ற சந்தேகம் வலுத்துள்ளது. குறிப்பாக போர்டல் முடக்கம், பக்கங்கள் விடுபடுதல், விடைத்தாள்கள் மாறுதல் போன்ற குளறுபடிகளால் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற முக்கியப் பாடங்களில் மாணவர்களின் மதிப்பெண்கள், தேர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவில்
சரிந்தது.

கருப்புப் பட்டியல்

இந்த டிஜிட்டல் பணிக்கான ஒப்பந்தத்தை பெற்ற ‘கோயம்ட்’ என்ற நிறுவனம், ஏற்கெனவே தெலங்கானா அரசால் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட ஒன்று என்பது எத்திகல் ஹேக்கர்கள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கு வதற்காக விதிகளில் 3 முறை தளர்வுகள் செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது. இதற்காக சிபிஎஸ்இ தலைவர், செயலாளர் மாற்றப்பட்டது மிகக் குறைந்த நடவடிக்கை, அதுவும் மிகத் தாமதமாக எடுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. உயர்மட்ட அதி காரிகளின் தலையீடு இல்லாமல் விதிகளில் மாற்றம் செய்திருக்க முடியாது. அதனால் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் அல்லது பிரதமர் அவரை பதவி யிலிருந்து நீக்க வேண்டும்; தேசிய தேர்வு முகமை, சிபிஎஸ்இ மதிப்பீட்டு முறை குறித்து குறிப்பிட்ட கால வரம்பிற்குள் சுதந்திரமான நீதித்துறை அல்லது வல்லுநர் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் கசிவைத் தடுக்க அதிநவீன கிரிப்டோகிராபிக் பாதுகாப்பு நெறிமுறைகளும், டிஜிட்டல் மென் பொருள்களைப் பயன்படுத்தும் முன் மூன்றாம் தரப்பு தணிக்கையும் கட்டா யமாக்கப்பட வேண்டும்.

லட்சக்கணக்கான மாணவர்களையும், அவர்தம் குடும்பத்தினரையும் மன உளைச்ச லுக்கு ஆளாக்கிய இந்தத் தவறுகளுக்கு, வெறும் அதிகாரிகளை மட்டும் ‘பலிகடா’ ஆக்கி விட்டு உயர்மட்டத்தினர் தப்பிக்க முடியாது” என கடிதத்தில் கறாராகத் தெரி வித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *