மதுரை மணியம்பட்டியில் 2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு சங்ககால நாகரிகத்திற்கு மேலும் ஒரு சான்று!

மதுரை, ஜூன் 12: மதுரை மாவட்டம் மணியம்பட்டி கிராமத்தில் சுமார் 2000 ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் பயன்படுத்திய தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது தொல்லியல் ஆர்வலர் களிடையே பெரும் உற் சாகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

கண்டறியப்பட்ட தாழிப் பானையுடன் கருப்பு-சிவப்பு நிற கலவை யால் செய்யப்பட்ட இரண்டு பழமையான கிண்ணங்களும் கிடைத் துள்ளன. சங்ககால நாகரிகத்தின் முக்கிய அடையாளங்களாகக் கருதப்படும் கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்பாண்டங்கள் கிடைத்திருப்பதால், இக்கண்டுபிடிப்பு மிகுந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், அப்பகுதியின் மேற்பரப்பில் இன்னும் முழுமையாக வெளிப் படாத நிலையில் இரண்டு முதுமக்கள் தாழிப் பானைகளின் தடயங்களும் தென்பட்டுள்ளதாக கூறப் படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் பழங்கால அடக்கத்தளமாக இருந்திருக்கலாம் என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து, மணியம்பட்டி பகுதியில் தொல்லியல் துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மற்றும் வரலாற்று ஆர் வலர்கள் மத்தியில் வலுத் துள்ளது.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், கீழடி, கொடுமணல், பொருந் தல் உள்ளிட்ட பல் வேறு தொல்லியல் தளங்களில் ஏற்கெனவே முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் மட்டும் இதுவரை 21 இடங்களில் தாழிப் பானைகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது மணியம்பட்டியில் கிடைத்துள்ள இந்த புதிய கண்டுபிடிப்பு, மதுரை மாவட்டத்தின் தொன்மையான வரலாற்றுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என தொல்லியல் ஆய்வா ளர்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *