சண்டிகர், ஜூன் 11 செவிலி யர்களைத் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசிய விவகாரத்தில் அரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா, செவிலியர்களின் தொடர் போராட்டம் மற்றும் அரசின் கடும் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.
அரியானா மாநிலம் குருக்ஷேத்திராவில் உள்ள எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆய்வு நடைபெற்றது. அப்போது அங்கிருந்த பெண் செவிலியர் அதிகாரி ஒருவரை, மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா மிகவும் மோசமாகவும், தரக்குறைவாகவும் நடத்தியதாகப் புகார் எழுந்தது.
“அவர் எங்களது புனிதமான பணியை இழிவுபடுத்தும் வகையில் பேசியதுடன், பெண் அதிகாரியுடன் மிகவும் கொச்சையாக நடந்து கொண்டார்” என்று செவிலியர் ஊழியர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.
மாநிலம் தழுவிய
போராட்டம்
இந்தச் சம்பவம் செவிலியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ரேணு பாட்டியா பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது அவரைப் பதவி யில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தி, அரியானா மாநிலம் முழுவதும் செவிலிய ஊழியர்கள் தீவிரப் போராட்டத்தில் குதித்தனர். பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகள் முன்பாக செவிலியர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்பதில் ரேணு பாட்டியா பிடிவாதமாக இருந்தார்.
போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அரியானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்த்தி ராவ், “குருக்ஷேத்திராவில் நடந்த சம்பவம் மிகவும் வெட்கக் கேடானது” என்று கண்டனம் தெரிவித்தார். மேலும், இது தொடர் பாகச் சம்பந்தப்பட்ட தலைமை மருத்துவ அதிகாரி ஏற்ெகனவே பணிநீக்கம் செய்யப்பட்டார்.
பதவி விலகினார்
பாஜகவின் முன்னாள் பிரமுகரான ரேணு பாட்டியாவுக்கு எதிராகச் செவிலியர்களின் போராட்டம் ஓயாததாலும், மாநில அரசின் அழுத்தம் அதிகரித் ததாலும், அவர் தனது மகளிர் ஆணையத் தலைவி வேறு வழியின்றி பதவி விலகியுள்ளார். இந்த அதிரடித் திருப்பம் அரியானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செவிலி யர்களைத் தரக்குறைவாகவும், கொச்சையாகவும் பேசிய விவகாரத்தில் அரியானா மாநில மகளிர் ஆணையத் தலைவி ரேணு பாட்டியா, செவிலியர்களின் தொடர் போராட்டம் மற்றும் அரசின் கடும் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி தனது பதவியை விட்டு விலகியுள்ளார்.